இவருக்கு கண்டிப்பாக தரனும்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர் பரிந்துரை.. வாய்ப்பிருக்கா?
கீவ் : அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல ஐரோப்பிய அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உக்ரைன், மரியுபோல் குண்டுவெடிப்பில் இடிபாடுகளில் சிக்கிய 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளிலும், தாக்குதலிலும் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்
உக்ரைன் படைகள் வலுவாக எதிர்ப்பதால், இரு தரப்பினருக்கும் கடுமையாக மோதி வருகின்றனர். போர் தொடங்கியதில் இருந்து கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட 222- பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 241 பொதுமக்கள் உள்பட 889- பேர் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்து இருப்பதாகவும் கீவ் நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா தாக்குதல்
உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்த தியேட்டர் மீது ரஷியா பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 816 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. அதேபோல், 1,833- பேர் காயம் அடைந்துள்ளனர். பெரும்பாலானோர் ரஷிய படைகளின் நேரடி தாக்குதலில் உயிரிழந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு அறிவிப்பு
இந்நிலையில், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும், உலக அமைதிக்கும் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10ஆம் தேதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.

ஐரோப்பியர்கள் கோரிக்கை
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் வோலோமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாகவும், எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications