இந்தியாவை தொடர்ந்து.. அமெரிக்காவுக்கு பார்சல் சேவையை ரத்து செய்த ஐரோப்பிய நாடுகள்! சிக்கலில் டிரம்ப்
பாரிஸ்: சுங்க வரி அதிகரிப்பு காரணமாக அமெரிக்காவுக்கான போஸ்டல் பார்சல் சேவைகளை இந்தியா நிறுத்தியிருக்கிறது. தற்போது இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் இதேபோல பார்சல் சேவைகளை நிறுத்தியிருக்கின்றன. இதனால் அமெரிக்கா சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.
அமெரிக்க அரசு 'டி மினிஸ்' என்கிற ஒப்பந்தத்தை செயல்படுத்தி வந்தது. இதன் மூலம் ஏற்றுமதிக்கு கட்டண விலக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இது இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா இன்று முதல் அமல்படுத்தியிருக்கிறது. இது அஞ்சல் போக்குவரத்து சேவைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. எனவே எனவே இந்தியா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 30 நாடுகள் அமெரிக்காவுக்கான அஞ்சல் பார்சல் சேவையை நிறுத்தியிருக்கின்றன.

'டி மினிஸ்' என்கிற ஒப்பந்தம் அமலில் இருந்த போது ரூ.70,500 மதிப்புக்கு குறைவாக உள்ள பார்சல் பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒப்பந்தம் முடிவடைந்திருப்பதால் பல நாடுகளும் தங்கள் பார்சல் சேவையை நிறுத்திருக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் ரூ.11,999 கோடி அளவிலான அஞ்சல் பார்சல்களை, 'டி மினிஸ்' ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. தற்போது இந்த சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது. இந்தியா தவிர, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லீச்டன்ஸ்டைன், லிதுவேனியா, மால்டா, மால்டோவா, மாண்டினீக்ரோ, நார்வே, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, சிங்கப்பூர், ஸ்லோவேனியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளும் தற்போது அமெரிக்காவுக்கான அஞ்சல் பார்சல் சேவையை நிறுத்தியிருக்கின்றன.
இதில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும். ஜெர்மனியில் டாய்ச் போஸ்ட் என்கிற பெயரில் டி.எச்.எல் பார்சல் சேவையை வழங்கி வருகிறது. இந்த டாய்ச் போஸ்ட், கடந்த 22ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை நிறுத்திவிட்டது. ஜப்பான் போஸ்ட் கடந்த 25ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஆனால் தென் கொரிய அஞ்சல் சேவையான யு.பி.எஸ், அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்பி வருகிறது. அதேபோல ஆஸ்திரேலியாவில் ஃபெட்எக்ஸ் நிறுவனமும், நியூசிலாந்து அஞ்சல் சேவை நிறுவனமும் அமெரிக்காவுக்கான தங்களது பார்சல் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications