உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு.. உக்கிரமாகும் உக்ரைன்- ரஷ்யா போர்
ப்ருஸல்ஸ்: ரஷ்யா கொடூரமாக தாக்கி வருவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் போர் விமானங்களையும் வாங்கி அனுப்ப ஐரோப்பிய யூனியன் நாடுகள் முன் வந்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுத்து உதவி வருகின்றன. இதனால் ரஷ்யா உலக நாடுகளுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் நீர் மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை ரஷ்ய படைகள் அழித்துவிட்டன. அங்குள்ள உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

உக்ரைன்
உக்ரைனைவிட்டு ஆண்கள் வெளியேறக் கூடாது என்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் வயதானவர்களும் நாட்டை விட்டு வெளியேறி அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். இந்த நிலையில் ரஷ்யா தாக்குதலை எதிர்கொள்ள ஆயுதங்களையும் போர் விமானங்களையும் அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன் வந்துள்ளன.

உக்ரைனுக்கு உதவி
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி போர் விமானங்கள் வரை உக்ரைனுக்கு கொடுத்து உதவவுள்ளோம்.

கொடூரமான போர்
மிகவும் கொடூரமான போரை உக்ரைன் எதிர்கொள்ள தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதே போல் தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில் உக்ரைனுக்கு உதவ நாங்களும் முன் வந்துள்ளோம்.
Recommended Video

நவீன ஆயுதங்கள்
போர் தாக்குதலால் சிக்கி தவிக்கும் உக்ரைனுக்கு முதல் முறையாக நாங்கள் ஆயுதங்களை வாங்கி கொடுக்க போகிறோம். அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளையும் வலுப்படுத்தி வருகிறோம். ஐரோப்பிய யூனியன்களில் ரஷ்யா டுடேவுக்கும் ஸ்பூட்டினிக் ஒளிபரப்பிற்கும் தடை விதித்துள்ளோம். ரஷ்யாவை எதிர்த்து தைரியமாக போராடும் உக்ரைனுக்கு நாங்கள் உதவுகிறோம் என தெரிவித்துளளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications