அம்பலப்படுத்திய மாஜி மனைவி.. அமெரிக்க நைட் கிளப் கொலையாளியும் 'கே'! வழக்கில் திடீர் திருப்பம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் நைட் கிளப்பில் புகுந்து 49 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளியும் ஓரின சேர்க்கையாளர்தான் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. கொலையாளியின் முன்னாள் மனைவியும், வகுப்பு தோழனும் இதை உறுதி செய்துள்ளனர்.
இந்த தகவலின் மூலம், இது ஓரினச் சேர்க்கையை எதிர்த்து நடந்த கொலையில்லை என்பதும், தீவிரவாத செயல்தான் என்பதும் அம்பலமாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில், அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் பதவிக்கான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒர்லான்டோ நைட் கிளப்பில் தாக்குதல் நடத்திய உமர் மதீன் தந்தை சித்திக் அளித்த பேட்டியில் தனது மகனுக்கு ஓரின சேர்க்கையாளர்களை கண்டாலே பிடிக்காது, எனவே கொலை செய்திருக்க கூடும் என்று கூறியிருந்த நிலையில், முன்னாள் மனைவியும், வகுப்பு தோழனும் கூறியுள்ள தகவல்கள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2006ம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள, இந்தியன் ரிவர் கம்யூனிட்டி காலேஜில் ஒன்றாக படித்தபோது தன்னுடன் ஓரினச் சேர்க்கை செய்ய மதீன் கேட்டுக்கொண்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத, வகுப்பு தோழன், அமெரிக்க பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
மதீன் முன்னாள் மனைவி சிதோரா யுசுபியின் தற்போதைய காதலன், டிவி பேட்டியில் கூறுகையில், மதீன் ஒரு ஓரின சேர்க்கை விரும்பி என சிதோரா என்னிடம் அடிக்கடி கூறுவார். மதீனின் தந்தை, அவரை பார்த்து ஓரின சேர்க்கையாளனே.. என அவ்வப்போது கூப்பிட்டுள்ளதாகவும் சிதோரா என்னிடம் கூறியிருந்தார். இவ்வாறு அந்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த நைட் கிளப்பின் ரெகுலர் வாடிக்கையாளராக மதீன் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஓரினசேர்க்கையாளருக்கான வலைத்தளத்திலும் மதீன் தனது பெயரை பதிவு செய்து வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அதேநேரம், ஓரின சேர்க்கையாளர்களை தேடி கொலை செய்யும் நோக்கத்திலும் மதீன் இவ்வாறு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கலாம் என்ற கோணத்தையும் மறுப்பதற்கில்லை என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications