"சீன்" படங்களை வைத்தே.. தேர்தல் நிதி திரட்டி.. விமர்சனத்தை நொறுக்கிய பாசக்கார "மாடலிங்".. சபாஷ் மேயர்
ஆபாச நடிகை ஒருவர், தேர்தலில் வெற்றி பெற்று மேயராகவும் திகழ்ந்து வருகிறார்
க்வீடோ, (ஈக்வடார்): ஒரு கவர்ச்சி நடிகை, அரசியலில் நுழைந்து கலக்கி கொண்டிருப்பதை, ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் ஈக்வடார் நாட்டு மக்கள்.. யார் அவர்?
சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பல பிரபலங்கள் அரசியல் பக்கம் காலடி எடுத்து வைப்பது அதிகரித்து வருகிறது.. இது நம்ம ஊர் முதல் ஹாலிவுட் வரை பரவிவரும் நடைமுறையாகும்.
பிரபல நடிகர், நடிகைகள் வரிசையாக அரசியலுக்கு வருவதும், அவர்கள் கட்சி தொடங்குவதும் புதிது அல்ல.. மற்றொருபக்கம் மார்க்கெட் போன கவர்ச்சி நடிகைகளையும், சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொண்டு வருகின்றன..

கவர்ச்சி புயல்
தேர்தல் சமயங்களில், இதுபோன்ற கவர்ச்சி நடிகைகளை பிரச்சாரங்களில் இறக்கி, அதன்மூலம் வாக்கு வங்கிகளை அள்ளவும் அக்கட்சிகள் திட்டமிடுகின்றன.. நடிகைகள் மட்டுமே என்றில்லாமல், சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்களையும், பிரச்சாரத்துக்கு களமிறக்க முடிவு செய்கின்றன.. இதற்கு ஒரு உதாரணம் நம் நாட்டிலேயே நடந்துள்ளது.. சில வருடங்களுக்கு முன்பு, டிக் டாக் ஆப் பிரபலமாக இருந்த சமயத்தில், அதில் புகழ்பெற்றவராக திகழ்ந்தவர் சோனாலி.. கவர்ச்சிகரமான டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு, தேசிய அளவில் புகழ் பெற்றார்...

முதல்முறை
பொதுமக்களிடம் இருக்கும் ஈர்ப்பை கண்டு, பாஜக தேர்தலில் இவரை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தது.. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் இவருக்கு வாய்ப்பும் தந்தது. இந்தியாவிலேயே "ஆப்" மூலம் பிரபலமான ஒருவருக்கு அரசியல் கட்சி ஒன்று சீட் தருவது இதுவே முதல் முறையாகும்.. இவர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்றாலும், கவர்ச்சி பிரமுகர் ஒருவர், அதுவும் ஆப் மூலம் அரசியலுக்குள் காலடி வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

மாடலிங் பெண்
இது நமக்குதான் புதுசு என்றாலும், வெளிநாடுகளிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், அவர் ஒரு ஆபாச பெண்மணி.. ஈக்வடார் நாட்டின் மாடல் அழகி ஆவார்.. மரியா பெர்னாண்டா வர்காஸ் என்பது அவரது பெயர்.. "மாஃபர்" என்று அவரை ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.. இவர் ஒரு மாடலிங் என்பதால், ஒரு பிரபலமான பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.. அதுமட்டுமல்ல, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பத்திரிகை துறையில் பட்டம் பெற்றவர்.. இப்போது விஷயம் என்னவென்றால், இவர் திடீரென அரசியலில் குதித்துவிட்டார்.. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மேயராகி உள்ளார்.

கிண்டல் கேலி
ஆனால், இந்த மேயர் பதவியை பெறுவதற்கு பல தடைகளை அவர் தாண்ட வேண்டி இருந்தது.. பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.. அரசியலில் போட்டியிட போவதாக அறிவித்த உடனேயே, பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.. அதைவிட அதிகமாக கிண்டலும் செய்தனர்.. ஆபாச வீடியோ, ஆபாச போட்டோக்களை பதிவிட்டு வந்தவர் தேர்தலில் போட்டியிட போகிறாரா? ஆபாச படங்களில் நடிக்க மட்டுமே இவர் லாயக்கு என்று சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தனர்.. எதைப்பற்றியும் கவலைப்படாத மரியா, ஒன்லி ஃபேன்ஸ் என்ற அந்த ஆபாச ஆப்களில் தன்னுடைய வீடியோக்கள் போட்டோக்களை மட்டுமே வைத்து, தேர்தல் நிதியை திரட்டினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

க்ளோஸ் அக்கவுண்ட்
அந்த நிதியை கொண்டே, போட்டியிட்டு வெற்றி பெற்று அனைத்து விமர்சனங்களையும் நொறுக்கி தள்ளினார்.. அத்துடன், அந்த வீடியோக்களை பதிவிட்டு வந்த ஆப் அக்கவுண்ட்டையும் க்ளோஸ் செய்துவிட்டு, மக்கள் பணியில் இறங்கி உள்ளார்.. ஒரு கவர்ச்சி பிரபலம், நேரடி அரசியலில் இறங்கி வெற்றி பெறுவது அந்த நாட்டில் இதுதான் முதல்முறையாம்.. மரியாவை கிண்டலடித்து கொண்டிருந்தவர்கள் இப்போது வாயடைத்து போயுள்ளார்களாம்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications