குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்..
குவைத்: குவைத் நகரத்தில் உள்ள அல் இமாம் அல்-சத் என்ற ஷியா பிரிவு மசூதியில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.
LATEST: #ISIS claims responsibility for #Kuwait mosque attack http://t.co/YZeWsJpBKR pic.twitter.com/ANpLYAluH6
— RT (@RT_com) June 26, 2015 அல்-சத் மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று 2000திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். மண்டியிட்டு அவர்கள் தொழும்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. நடந்த சம்பவத்தை உணரும் முன்போ ஏராளமானோர் ரத்த காயங்களுடன் சாய்ந்தனர். பலர் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குவைத் எம்.பி கலீல் அல் சலீக், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறினார். 30 வயது மதிக்கத்தக்க மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
attack on #Shia mosque in #Kuwait Political/legal/financial action needed against those promotig sectarian hatred pic.twitter.com/436bfOMQCW
— Peyman Jafari (@JafariPeyman) June 26, 2015 குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது உடனடியாக விரைந்தார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டதோடு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் மசூதியை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தம் வழிய வழிய படுகாயங்களுடன் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications