வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்? நள்ளிரவில் பயங்கரம்.. பீதியில் உறைந்த மக்கள்!
கராகஸ்: வெனிசுலாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்திருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடங்கலாம் என்கிற அச்சம் இருந்த நிலையில், தற்போது வெனிசலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலா தலைநகர் காரகாஸில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் ஏழு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. போர் விமானங்கள் தாழ்வாக பறந்த சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

திடீர் தாக்குதல்
லாகார்லோட்டா விமான நிலையத்தில் புகை கிளம்பியதால் மக்கள் அச்சத்துடன் வீதிக்கு வந்திருக்கின்றனர். இந்த வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை
சமீப நாட்களில் அமெரிக்க இராணுவம், வெனிசுலாவின் படகுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த படகுகள் மூலம் வெனிசுலாவிலிருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வெனிசுலா தயாராக இருப்பதாக நேற்று அறிவித்தது. இப்படி இருக்கையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது.
ராணுவம் குவிப்பு
போதை பொருள் குறித்து அமெரிக்க முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது என்றும், தங்கள் நாட்டின் எண்ணெய் வளங்களை கைப்பற்றவே அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் வெனிசுலா விமர்சித்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல், வெனிசுலாவின் கரீபியன் கடலில் பெரிய இராணுவப் படைகளை அமெரிக்கா குவித்து வைத்திருக்கிறது.
நியாயப்படுத்தும் அமெரிக்கா
இதனையடுத்து தொடர்ந்து வெனிசுலா படகுகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, முதன் முறையாக கடந்த வாரம் வெனிசுலாவின் துறைமுக பகுதி மீது திடீர் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த துறைமுகத்திலிருந்துதான் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது என்று சொல்லி இந்த தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தியிருந்தது.
டிரம்ப் vs வெனிசுலா
வெனிசுலா என்பது அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடு. இந்த நாட்டில் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை விட பெட்ரோலின் விலை இங்கு குறைவு. டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றபதற்கு முன்னர் வரை, அமெரிக்காவில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காற்று மாசு காரணமாக மின்சார வாகனத்தை நோக்கி முந்தைய அரசு நகர்ந்தது. ஆனால், டிரம்ப் வந்த பின்னர், டீசல் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தார்.
காரணம் இதுதான்
எனவே அமெரிக்காவுக்கு இப்போது கூடுதல் எரிபொருள் தேவைப்படுகிறது. இதனை பெறுவதற்காகவே வெனிசுலாவை அமெரிக்கா டார்கெட் செய்திருக்கிறது. அதேபோல, வெனிசுலாவில் இருப்பது கம்யூனிஸ்ட் அரசு. எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு பெரிய காரணம் எதுவும் டிரம்புக்கு தேவைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications