"கொசு"ப் பிரச்சினையைக் கூட தீர்த்துடலாம்.. ஆனா... !
பென்சில்வேனியா: உலகளாவிய அளவில் மிக முக்கியமான பிரச்சினைகளில் கண்டிப்பாக இதற்கும் ஒரு இடம் உண்டு. அதுதான் வாயு பிரியும் பிரச்சினை. இதனால் பல சங்கடங்கள் ஏற்பட்டாலும் பல சண்டைகளும் கூட மூண்டுள்ளன. இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரிய வழக்குகளையும் மேலை உலகம் கண்டுள்ளது. இந்த நிலையில் கணவர் விட்ட "கேஸுக்காக" அவரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார் அவரது மனைவி.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட். இவருக்கு இப்போது 70 வயதாகிறது. இவரது மனைவி பெயர் லுவான் கிளெம், 59 வயதாகிறது. லுவான் பென்சில்வேனியா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில் எனது கணவர் டிரென்டன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நானும் அதே நிறுவனத்தில்தான் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது கணவருக்கு வாயு பிரச்சினை உண்டு. இதற்காக அறுவைச் சிகிச்சை கூட செய்துள்ளார். ஆனால் இதில் பக்க விளைவுகளாக அடிக்கடி வாயு பிரிவது மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
ஆனால் அடிக்கடி அவர் வாயுவை வெளியேற்றியைக் குற்றமாக கருதி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது நிறுவனம். அவர் அடிக்கடி கேஸ் விட்டதால் வேலையிடம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எனது கணவர் பணியாற்றி வந்த பார்க் ரோல் கம்பெனியின் தலைவர் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கணவரால் ஒரே தொல்லையாக உள்ளது என்றும் விமர்சித்தார். உங்களது கணவரால் யாரும் அலுவலகத்தில் வேலை பார்க்க முடியவில்லை. விசிட்டர்கள் வரும்போது ஒரே நாற்றமாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். இது சரியல்ல. என்னையும், எனது கணவரையும் இந்த விஷயத்திற்காக தொல்லைப்படுத்திய அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லூவான் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications