என் மனைவிக்கு டெலிவரி.. நான் 2 மாசம் லீவுல போறேன்.. கலக்கும் ஜூகர்பெர்க்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால் அவர், தந்தையருக்கான 2 மாத பேறுகால விடுப்பில் செல்லவுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க் இரண்டாவது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கிறார். அக்குழந்தை பிறந்தவுடன் அவர் தந்தையருக்காக எடுக்கும் பேறு கால விடுப்பை 2 மாதங்களுக்கு எடுத்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து கொள்வார்.

பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க்கிற்கு பிரிசில்லா என்ற மனைவியும், மேக்ஸ் என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரிசில்லா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.

அவருக்கு இரண்டாவது குழந்தை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பிறக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜூகர்பெர்க் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கில் லைக்ஸ்

அந்த ஒரு பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதில் கமென்ட்டுகளும் கிடைத்துள்ளன. மேலும் 13 லட்சத்துக்கும் அதிகமான ரியாக்ஷன்களையும் பெற்றுள்ளது.

 அப்படி என்னதான் உள்ளது

அப்படி என்னதான் உள்ளது

அந்த பதிவில் அப்படி என்னதான் உள்ளது என்கிறீர்களா. குழந்தை பெறப் போகும் மனைவியையும், குழந்தையையும் தந்தை விடுப்பு எடுத்து கவனித்து கொள்ள வேண்டும் என்று அதில் மார்க் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது 2-ஆவது குழந்தை பிறந்தவுடன் நான் இரு மாதங்கள் விடுப்பில் செல்லவுள்ளேன்.

 முன்பு போல்

முன்பு போல்

முதல் குழந்தை மேக்ஸ் பிறந்தவுடன் எவ்வாறு தந்தையருக்கான மகப்பேறு விடுப்பு எடுத்து கவனித்துக் கொண்டேனோ அதுபோல் தற்போதும் விடுப்பு எடுக்கவுள்ளேன். டிசம்பர் மாதம் முழுவதையும் எடுக்கவுள்ளேன். பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில், குழந்தை பெற்றுக் கொள்ளபோகும் தாய், தந்தைக்கு 4 மாதங்கள் மகப்பேறு விடுப்புகள் அளிக்கப்படுகிறது.

 புது வரவுடன்...

புது வரவுடன்...

வேலைக்கு செல்வோர் நிச்சயம் தங்களுக்கு பிறந்த புதிய குழந்தையுடன் இருக்க வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நல்லது. நான் விடுப்பு முடித்து திரும்பி வரும்போது எனது நிறுவனம் அப்படியே ஸ்திரமான நிலையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சார், லீவுல இருக்கும்போது நீங்க பேஸ்புக் பாப்பீங்களா சார்??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+