Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபத்து.. ஆனால் உண்மை.. பேஸ்புக் நினைத்தால் உங்கள் மனநிலையை மாற்ற முடியும்..! ஆய்வில் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பேஸ்புக் மூலமாக அதன் பயன்பாட்டாளர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை மாற்ற முடியும் என்று ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. சமூக வலைத்தளங்களால் பயனாளர்களின் தனிமை அம்பலப்படுவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், பேஸ்புக்கே நடத்திய இந்த ஆய்வு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு

ஆய்வு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தால் பயனாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து, அந்த வலைத்தளத்தின் சார்பிலான குழு, கார்நல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன.

ஏழு லட்சம் பேர்

ஏழு லட்சம் பேர்

இதற்காக சுமார் ஏழு லட்சம் பயனாளர்களின் நியூஸ்பீட் பகுதியில் பேஸ்புக் தனது சில ஸ்டேட்டஸ்களை போட்டது. அதில் கோபம், சோகம், மகிழ்ச்சி உள்ளிட்ட பல தரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்டேட்டஸ்கள் கலந்து போடப்பட்டன.

மனதில் தாக்கம்

மனதில் தாக்கம்

அந்த ஸ்டேட்டஸ்களின் தகவலுக்குதக்கபடி தங்களை அறியாமலேயே பேஸ்புக் பயனாளிகள் மனது தாக்கத்துக்கு உள்ளானதை பார்க்க முடிந்தது,. சோகமான ஸ்டேட்டரஸ்கள் போடப்படும் தினத்தன்று பயனாளிகளும் அதுபோன்ற தகவல்களையே பகிர்ந்துள்ளனர். மகிழ்ச்சியை கண்ணில் காண்பிக்கும்போது அவர்களும் அதுபோல மாறிக்கொள்கின்றனர்.

ஆபத்தான நிலை

ஆபத்தான நிலை

இந்த ஆய்வு ஒரு முக்கியமான தகவலை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது, சமூக வலைத்தளங்களால் அதன் பயனாளர்களை கட்டுபடுத்த முடியும் என்பதுதான் அந்த செய்தி. மேலும், இது ஆபத்தான சங்கதியும் கூட. பக்கத்தில் உள்ள ஒருவரின் மனநிலை அருகிலுள்ளோரையும் பாதிப்பது உளவியல் ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் இப்போது சமூக வலைத்தளங்களும் தங்கள் தாக்கத்தை நிலைநாட்ட முடிகின்றது.

அந்தரங்கமும் போச்சு..

அந்தரங்கமும் போச்சு..

சமூக வலைத்தளங்களால் மனிதனின் அந்தரங்க தகவல்கள் அம்பலமாகிவரும் சூழ்நிலையில், அந்த வலைத்தளங்களால் மனிதன் பொம்மை போல ஆட்டுவிக்கப்படலாம் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+