செய்திகளுக்கு 'நோ' சொன்ன பேஸ்புக்.. நூதனமாக பணம் சம்பாரிக்க மார்க் போட்ட திட்டம்!
இனி பேஸ்புக் டைம்லைனில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் மிகவும் குறைவாக வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: பேஸ்புக் டைம்லைனில் பொதுவாக நம் நண்பர்களின் போஸ்டுகள் மட்டும் இல்லாமல் நாம் லைக் செய்து இருக்கும் பக்கங்களின் போஸ்டுகளும் வரும். அதேபோல் விளம்பரங்களும் வரும்.
இனி முதற்கொண்டு இந்த பேஜ்களின் போஸ்டுகள் மிகவும் குறைவாகவே வரும் என்று பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. மக்களை பேஸ்புக்கில் அதிக போஸ்டுகள் போட வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு பின் பெரிய வியாபார தந்திரம் ஒளிந்து இருக்கிறது. நூதனமாக பணம் சம்பாரிக்கும் மார்க்கின் பலே திட்டம் அம்பலம் ஆகி உள்ளது.

என்ன மாற்றம்
கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் தொடர்ந்து நிறைய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.பேஸ்புக்கின் மொபைல் ஆப்களில் ஏற்கனவே பேஸ்புக் பேஜ்களுக்கான தனி டைம் லைன் இருக்கிறது. ஆனால் யாரும் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் தற்போது பேஸ்புக் டைம்லைனில் வரும் பேஜ்களின், செய்தி நிறுவனங்களின் போஸ்டுகள் நியூஸ் பீடில் குறைவாக தெரியும்படி மாற்றப்பட உள்ளது.

காரணம் என்ன
பேஸ்புக்கில் இருக்கும் மக்களுக்கு இந்த விளம்பரமும், செய்திகளின் போஸ்டுகளும் அதிக தொல்லையாக இருக்கிறது. இதனால் மக்கள் போஸ்ட் போடுவதை குறைத்துக் கொண்டு அதிகமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே நியூஸ் வெப்சைட்டுகளின் போஸ்டுகள் குறைவாக தென்படும்படி மாற்றப்படுகிறது.
|
என்ன நடக்கும்
இதனால் பேஸ்புக்கின் மூலம் பகிரப்படும் செய்திகளின் அளவு குறையும். அதே சமயம் மக்கள் தங்கள் வாழ்க்கை குறித்து அதிகம் எழுத ஆரம்பிப்பார்கள். மக்களை பேஸ்புக்கில் அதிகம் எழுத வைக்கவே இந்த திட்டம். பயனாளிகளை வெறும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக வைத்து இருக்க பேஸ்புக் விரும்பவில்லை.

தந்திரம்
இதற்கு பின் வியாபார தந்திரம் இருக்கிறது. விளம்பரம் மூலம் பேஸ்புக்கிற்கு வரும் காசை விட இதன் மூலம் அதிக பணம் வரும். அதிக யூசர்கள் அதிக போஸ்டுகள் போடுவதால் டிராபிக் அதிகம் ஆகும். இது பேஸ்புக்கிற்கு அதிக லாபத்தை கொடுக்கும். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications