நோ போட்டோ, வீடியோ.. ஆனால் நேரில் சந்திக்கலாம்..பேஸ்புக் டேட்டிங் வசதி எப்படி செயல்படும்!

பேஸ்புக்கில் வெளிவர இருக்கும் டேட்டிங் பயன்பாடு எப்படி வேலை செய்யும் என்று முழுமையான தகவல் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பேஸ்புக் டேட்டிங் வசதி எப்படி செயல்படும்!-வீடியோ

    நியூயார்க்: பேஸ்புக்கில் வெளிவர இருக்கும் டேட்டிங் பயன்பாடு எப்படி வேலை செய்யும் என்று முழுமையான தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் சில நாளில் இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும்.

    பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதியை கடந்த வாரம் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார். பேஸ்புக்கில் மொத்தம் 200 மில்லியன் பேர் காதலிக்காமல், திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த சிங்கிள் சிங்கங்கள் தங்கள் இணையை தேடவும், தங்களுக்கு புதிய நண்பர்கள் தேடவும் வழியை ஏற்படுத்தவே இந்த பேஸ்புக் டேட்டிங் வசதியை கொண்டு வருவதாக அவர் கூறினார். தற்போது இது எப்படி செயல்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    கணக்கு

    கணக்கு

    தற்போது வர இருக்கும் பேஸ்புக் அப்டேட்டில், நம்முடைய புரொஃபைல் படத்திற்கு மேல் ஓரத்தில் ஒரு 'இதயம்' இருக்கும். அதை கிளிக் செய்தால், நம்முடைய ''டேட்டிங் ஹோம்'' என்ற பக்கம் திறக்கும். அதில் நாம் நமக்கு என்று புதிய புரொஃபைலை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை நம்முடைய நண்பர்கள் பார்க்க முடியாது. நம்மை தவிர இதை யாருமே பார்க்க முடியாது. இதுதான் இந்த டேட்டிங் உலகில் முதல்கட்டம்.

    நிகழ்வுகள்

    நிகழ்வுகள்

    இந்த பக்கத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், விழாக்கள் குறித்த தகவல் வெளியாகும். இதில் நமக்கு பிடித்த விழாக்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நமக்கு பக்கத்து தெருவில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றால், நமக்கு பிடித்து இருந்தால் அதில் கலந்து கொள்வதாக அந்த பக்கத்தில் குறிப்பிடலாம், இந்த விஷயத்தில் இருந்துதான் டேட்டிங் செய்வதற்கான கட்டம் தொடங்கும். நாம் தேர்வு செய்த பிறகு அதே நிகழ்விற்கு செல்லும் நபர்கள் நம் டேட்டிங் பக்கத்தை பார்க்க முடியும்.

    அருகில் இருப்பவர்கள்

    அருகில் இருப்பவர்கள்

    நாம் செல்லும் விழாவிற்கு யாரெல்லாம் செல்ல இருக்கிறார்கள் என்று இதன் மூலம் பார்க்க முடியும். அதில் நமக்கு பிடித்த நபர்களுடன் பொதுவில் உரையாடலாம், தனியாகவும் உரையாடலாம். இது நேரில் பார்க்கும் போது அவர்களுடன் பழக வசதியாக இருக்கும். இதனால் இதில் பேசும் நபர்கள் பெரும்பாலும் அடுத்த சில நாட்களில் சந்தித்துக் கொள்வார்கள்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இதற்காக தனியாக பேஸ்புக் மெசேஜ் பக்கம் இருக்கும் . நாம் எப்போதும் பேஸ்புக்கில் மெசேஜ் பண்ணும் இடத்தில் இந்த மெசேஜ்கள் இருக்காது. அதேபோல் இதில் புகைப்படம், வீடியோ அனுப்ப முடியாது. வீடியோ கால் பேச முடியாது. எழுத்துக்கள் மூலம் மட்டுமே பேச முடியும். மேலும் இதிலும் பிளாக் செய்யும் வசதி இருக்கிறது. பேஸ்புக்கில் பேசுவதை விட இது பாதுகாப்பாக இருக்கும் என்றும், இதில் பொய்யான தகவல்களை வைத்து ''பேக் ஐடிக்கள்'' வலம் வர முடியாது என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+