பேஸ்புக்கில் துக்கச் செய்தி: இனி, லைக் போட வேண்டிய தர்மசங்கடம் இல்லை...
நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் இந்தத் தர்மசங்கடத்தை அனுபவித்திருப்பீர்கள்...
உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ யாராவது அவரது மனத் துயரத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் ஸ்டேட்டஸிற்கு நீங்கள் உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால், அதனை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் லைக் போட்டு வைப்பீர்கள்.
உங்களுக்கே தெரியும் இதற்கு லைக் போடக் கூடாது என ஆனால், வேறு வழியில்லையே என வருத்தப் பட்டு வந்த உங்களுக்காகவே இதோ புதிய வசதி ஒன்றை அறிமுகப் படுத்தப் போகிறார்கள் பேஸ்புக் தயாரிப்பாளர்கள்.

சிம்பதி பட்டன்...
உங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தும் வகையில் இனி, பேஸ்புக்கில் ‘சிம்பதி' என்ற புதிய பட்டனும் சேரப் போகிறது.

விரைவில்...
இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும் எனவும் பேஸ்புக் நிர்வாகப் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மெயில்களில்...
இந்தப் புதிய பட்டனானது எல்லா ஸ்டேட்டஸிலும் இருக்காதாம். குறிப்பிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஸ்டேட்டஸுகளுக்கு மட்டும் ஒளிரும் வகையில் அமைக்கப் பட உள்ளதாம்.

இப்போதைக்கு இல்லை...
மக்கள் இந்த வசதியைப் பயன் படுத்த ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தாலும், அதனை இப்போதைக்கு அறிமுகப் படுத்தும் ஐடியா இல்லையாம்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்...
விரைவில் இது போன்ற வசதி அறிமுகமானால் பேஸ்புக் பயன் படுத்துவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஏனெனில், பலர் துயரச் செய்திகளுக்கும் லைக் போட்டு பாடாய் படுத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications