ஆமை வேக நெட் கனெக்ஷனா?... உங்களுக்காகவே வந்துருச்சு 'பேஸ்புக் லைட்'!
வாஷிங்டன்: இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால், அதன் வேகம்தான் பல நேரங்களில் ஆமை வேகத்தினை விட குறைந்து எரிச்சலை ஏற்படுத்தும்.
முக்கியமாக, நம்மவர்கள் பேஸ்புக்கில் தங்களது "அழகான" முகத்தினை போட்டோ எடுத்து பதிவேற்றும்போதுதான் அது மக்கர் செய்யும்.

அப்ளிகேஷன் வந்துருச்சு:
இப்படி கஷ்டத்திற்கு உள்ளாகும் ஆன்ட்ராய்ட் வாடிக்கையாளர்களின் மனதை துல்லியமாகப் புரிந்து கொண்ட பேஸ்புக் புது அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

எளிதாக யூஸ் செய்யலாம்:
மெதுவான இன்டர்நெட் கனெக்ஷன் கொண்டவர்கள், செல்போனில் குறைவான மெமரி உள்ளவர்கள், 2 ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த புதிய ஆப் மூலம் பேஸ்புக்கை எளிமையாகவும், துரிதமாகவும் உபயோகிக்கலாம்.

ஆமை வேக இன்டர்நெட்:
இந்த அப்ளிகேஷன் 1 எம்பிக்கும் குறைவான இடத்தை தான் எடுக்கும். மெதுவான இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலும் வேலை செய்யும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அது கண்டிப்பா முடியாது:
இதன் மூலம் நியூஸ் பீட்ஸ், ஸ்டேட்டஸ் அப்டேட், புகைப்படங்கள், நோட்டிபிகேஷன் ஆகியவற்றைப் பார்க்க முடியும். அதேநேரம் வீடியோக்களை பார்க்க முடியாது.

ஆசியாவில் அறிமுகம்:
இந்த அப்ளிகேஷன் முதலில் ஆசியாவில் சில நாடுகளில் வெளிவந்த பின்னர் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வெளிவரும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications