இந்தியாவுக்கு "பேசிக்ஸ்" கிடையாது.. கடுப்பில் "ப்ரீ"யை ரத்து செய்த பேஸ்புக்!
கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனம் தனது ப்ரீ பேசிக்ஸ் சேவையை இந்தியாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் டிராய் அமைப்பு, இணைய சமநிலைக்கு ஆதரவாக முடிவெடுத்திருப்பதால், ப்ரீ பேசிக்ஸை நிறுத்தி விட்டது பேஸ்புக்.
பேஸ்புக் நிறுவனத்தின் ப்ரீ பேசிக்ஸ் சேவை பெரும் சர்ச்சைகளையும், விவாதத்தையும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இணையச் சமநிலைக்கு இதனால் பெரும் பங்கம் வரும் என்று எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில் இணையச் சமநிலையை உறுதி செய்யும் வகையில் டிராய் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இணையதளம் வாயிலாக வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக கருதப்படும். ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க கூடாது என்று கூறி விட்டது டிராய்.

பேஸ்புக்குக்கு அடி
இந்த முடிவு பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தனது ப்ரீ பேசிக்ஸ் சேவை திட்டத்தை அது இந்தியாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கிடைக்காது
இதுகுறித்து பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ளவர்களுக்கு இனிமேல் ப்ரீ பேசிக்ஸ் கிடைக்காது என்று விளக்கியுள்ளார்.

ப்ரீ பேசிக்ஸ் திட்டம்
ப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கின் சேவைகளை இலவசமாக பெறுவது என்பதாகும். ஆனால், இதில் இணைந்தால், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே இலவசமாக பார்க்க முடியும். பல தளங்களை நாம் இலவசமாக பெற முடியாது.

சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்
ஆனால் இது அனைத்து இணையதளங்களையும் பார்க்க விடாமல் தடுக்கும் செயல் என்று எதிர்ப்புகள் கிளம்பின. அடிப்படை உரி்மையை, சுதந்திரத்தை மீறும் செயல் இது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

ரிலையன்ஸுடன் இணைந்து
ரிலையன்ஸின் ஆர்காம் மூலமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த பேஸ்புக் திட்டமிட்டிருந்தது. ஆனால் கட்டண பாரபட்சம் காரணமாக் அதற்கு டிராயில் தடை போட்டதால் கடந்த டிசம்பர் மாதத்தில் இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பேஸ்புக் நிறுவனம் இதை கைவிட்டுள்ளது.

30 நாடுகளுக்குத் தொடரும்
அதேசமயம், 30 நாடுகளில் ப்ரீ பேசிக்ஸ் திட்டம் தொடரும் என்று பேஸ்புக் கூறியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த சேவை கிடைக்காது.

அது என்ன இணையச் சமநிலை?
இணையச் சமநிலை என்றால் என்ன தெரிய விரும்புவோர் இதில் போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications