ஒரு மாலை இளவெயில் நேரம்.. சிகாகோவில் ஒரு அழகிய காலம்!
Recommended Video

சிகாகோ: ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ... என்று பாடலில் வருவது போல அழகான இலையுதிர் காலம் தான் இப்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில்.
கோடை காலம், குளிர் காலம் இந்த இரண்டு காலத்துக்கும் இடைப்பட்டது தான் இந்த இலையுதிர் காலம். கோடை காலத்தின் கடும் வெயில் குறைந்து மெல்ல மெல்ல குளிர் லேசாக பரவ துவங்கும்.
இந்த இலையுதிர் காலம் செப்டம்பர் இறுதியில் ஆரம்பித்து, அக்டோபர், நவம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். ஆங்கிலத்தில் ஃபால் சீசன் அல்லது ஆட்டம் (Autumn) சீசன் என்று சொல்கிறார்கள் .

பச்சை நிறமே பழுப்பு நிறமே
இந்த இலை உதிர் காலத்தின் சிறப்பே பச்சை இலைகள் எல்லாம் இந்த காலத்தில் மஞ்சள், பழுப்பு, சிகப்பு, பிரவுன் என்று வண்ண வண்ணமாக மாறுவது தான் . குச்சி குச்சியாக நீளமான இலை கொண்ட மரங்களை தவிர எல்லா மரங்களும் நிறம் மாறி சாலையோரங்களில் இருபுறமும் பார்ப்பதற்கே அழகு தான். குளிர்காலத்தில் எல்லா இலைகளும் உதிர்ந்து பட்ட மரம் மாதிரி இருக்கும் என்பது வேற கதை.

ரசிக்க நல்ல காலம்
எல்லா இடங்களிலும் வண்ண இலைகள் கொண்ட மரங்கள் பார்க்க முடிந்தாலும் இந்த இல்லை உதிர் காலத்தை ரசிக்க என்று சிறப்பு இடங்கள் இருக்கு. அந்த மாதிரி இடங்களில் இரு புறமும் வண்ணம் மாறும் இலைகளை ரசித்து ஒரு லாங் டிரைவ் போகலாம்.

வாங்கிங் போங்க
குளிரை பொருட்படுத்தாமல் சின்ன ஜாக்கெட் போட்டுகொண்டு அந்த மரங்களோடு மெல்ல நடக்கலாம். அப்படியான ஒரு அழகான இடம் தான் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற இடத்தில் உள்ள லேக் ஜெனீவா.
அழகான விஸ்கான்சின்
விஸ்கான்சின் லேக் ஜெனீவாவில் உள்ள ஒரு அழகான ஏரியை சுற்றி நடந்து கொண்டே மிதந்து போகும் படகையும் வரிசையாக சுற்றி இருக்கும் அழகு ஆடம்பர பங்களா அப்புறம் எல்லா பக்கமும் இருக்கும் அழகான மரங்களையும் வண்ண வண்ண இலைகளையும் ரசித்து கொண்டே ஒரு குட்டி நடை போட விரும்பினால் இந்த விடியோவை பாருங்க.
- Inkpena சஹாயா
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications