கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்!
கிரெனோபிள், பிரான்ஸ்: 7 முறை பார்முலா ஒன் போட்டி சாம்பியனாக, முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஷமேக்கர் தொடர்ந்து கோமாவில் இருக்கிறார். இன்று அவரது 45வது பிறந்த நாளாகும். ஆனால் ஷூமேக்கர் கோமாவில் இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த நாளை மிகவும் அமைதியாக, ஷூமேக்கர் புகழை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
ஷூமேக்கரின் இணையதளத்தில் அவரைப் புகழ்ந்து அவரது குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஷூமேக்கர் ஒரு போராளி. அவர் அவ்வளவு சீக்கிரம் இந்த உயிர்ப் போராட்டத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் புகழ்ந்துள்ளனர். ரசிகர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது திடீரென தடுமாறி விழுந்து பாறையில் தலை மோதியதில் படுகாயமடைந்த ஷூமேக்கர் தற்போது பிரெஞ்சு மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

அனைவருக்கும் நன்றி
மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் அவரது இணையதளத்தில் விடுத்துள்ள செய்தியில், ஷமேக்கருக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

விட்டுக் கொடுக்காத போராளி
மேலும் அவர்கள் கூறுகையில், உலகெங்கும் ஷூமேக்கருக்காக பிரார்த்தனை செய்யும், விரைவில் குணமடைய வேண்டி செய்திகளை அனுப்பி வரும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது. ஷூமேக்கர் ஒரு போராளி. அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்தப் போராட்டத்திலும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார், வெல்வார். நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

7 முறை சாம்பியன்
பார்முலா 1 கார்ப் பந்தயத்தின் ஹீரோவாக வலம் வந்தவர் ஷூமேக்கர். 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். அசைக்க முடியாத கார்ப்பந்தய வீரராக திகழ்ந்தவர். உலகெங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களை வசீகரித்த பந்தய வீரர்.

இரண்டாக உடைந்து சிதறிய ஹெல்மட்
ஷூமேக்கர் விபத்துக்குள்ளானபோது அவரது தலையில் போட்டிருந்த ஹெல்மட்டின் தரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியது. பாறையில் மோதிய வேகத்தில் அவரது ஹெல்மட் இரண்டாக உடைந்து சிதறி விட்டதாம். இதனால் ஹெல்மட்டின் தரம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுகுறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனை முன்பு அமைதிக் கூட்டம்
இதற்கிடையே ஷூமேக்கர் பல வருடம் இணைந்து கார்ப்பந்தயங்களில் பங்கேற்ற பெராரி எப் ஒன் அணியைச் சேர்ந்த நிர்வாகத்தினர், வீரர்கள் அனைவரும் இன்று ஷூமேக்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு கூடி அமைதி கூட்டம் நடத்தவுள்ளனர்.

ஷூமேக்கருக்கு அருகில் மனைவி, குழந்தைகள்
ஷூமேக்கருக்கு அருகிலேயே அவரது மனைவி கோரின்னா, இரு குழந்தைகள், தந்தை, தம்பி ஆகியோர் உடன் இருந்து வருகின்றனர்.

குவிந்து கிடக்கும் மீடியாக்காரர்கள்
ஷூமேக்கருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரது உடல் நலம் குறித்த செய்திகளைச் சேகரிக்க மருத்துவமனை அருகிலேயே பல்வேறு மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாறு வேடத்தில் மருத்துவமனைக்குள் ஊடுறுவ முயன்று பரபரப்பையும் ஏற்படுத்தினர். பாதிரியார் போல ஒரு செய்தியாளர் உள்ளே போய் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications