நைஜீரியாவில் ரஜினியின் கபாலியைக் கொண்டாடிய ரசிகர்கள்!
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 'கபாலி' படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள்.
நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்காக படத்தை தங்களது சொந்த முயற்சியால் திரையிட்டுள்ளார்கள்.

'கபாலி' படத்தைப் பார்க்க தமிழ் மக்கள், இந்திய மக்கள், நைஜீரியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு மக்கள் ஆகியோரும் படத்தை ஆர்வத்துடன் வந்து ரசித்துள்ளார்கள். 6 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது.
படம் பார்க்க வந்த அனைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் ரஜினி ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது. நைஜீரிய நாட்டுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி 'கபாலி' படக் காட்சியைத் துவக்கி வைத்துள்ளார்.

அனைவரும் 'கபாலி' படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ரஜினிகாந்திற்கு வயது 60க்கும் மேல் என்று சொன்னால் நைஜீரிய மக்கள் நம்பவேயில்லையாம். அடுத்த முறை ரஜினிகாந்த் படம் வெளியிட்டால் அதை நைஜீரிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுங்கள் என ரஜினி ரசிகர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அனைவரும் பெருமையுடன் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன் 'வேதாளம், தெறி' ஆகிய தமிழ்ப் படங்கள் அங்கு ஓரளவிற்கே வரவேற்பைப் பெற்றதாம். 'கபாலி' படத்திற்கு அனைவரும் ஆர்வத்துடன் வந்து படம் பார்த்து ஹவுஸ் புல்லாக்கி விட்டனர். இன்னும் கூட சில காட்சிகளை நடத்த அனைவரும் கேட்டுக் கொண்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தார்கள்.
'கபாலி' பட வெளியீடு நைஜீரியாவிலும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications