Jana Nayagan: ஆல்தோட்ட பூபதி முதல் அர்ஜுனரு வில்லு வரை! அதிர்ந்த அரங்கம்! கடைசி பாட்டு எது தெரியுமா?
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஜன நாயகன் (Jana Nayagan Audio Launch) இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக நடந்த "தளபதி திருவிழாவில்" செல்போன் டார்ச்சை ஆன் செய்து ரசிகர்கள் டான்ஸ் ஆடினர். இந்த இசை நிகழ்ச்சியின் கடைசியாக முடிக்கப்பட்ட பாடல் எது தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் "ஜன நாயகன்" படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் விஜய் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புக்கிட் ஜலீல் மைதானத்திற்கு வருகை தந்தார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சியையும் (Live in Concert) நடத்த திட்டமிடப்பட்டு அனிருத் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் மலேசியா சென்றுள்ளனர்.
அது போல் பின்னணி பாடகர்கள் எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஆன்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம், கிரிஷ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு விஜய் கோட் சூட் அணிந்து வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் இசை கச்சேரி தொடங்கும் போதே மழை குறுக்கிட்டது. இதனால் அங்கிருந்த எம்ஐபிக்களுக்கு (Most Important Persons) படக்குழு சார்பில் ரெயின் கோட் வழங்கப்பட்டது. ஸ்வேதா மோகன் "மாச்சோ" பாடலையும் விஜய் யேசுதாஸ் "நீ யாரோ" பாடலையும் பாடியிருந்தனர்.
பின்னர் இந்த இசை நிகழ்ச்சியில் "ஆளப்போறான் தமிழன்", "அழகிய தமிழ் மகன் நீதானே", "யார் பெற்ற மகனோ", "சொல்லாமலே யார் பார்த்தது", "சின்ன தாமரை", "என்ன தாலாட்டு வருவாளோ" , "அட ஆள் தோட்டப் பூபதி நானடா", "ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்
பாப்பு பாப்பு" உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. இதற்கு ரசிகர்கள் கூட சேர்ந்து பாடி மகிழ்ந்தனர்.
அது போல் "கில்லி" படத்தில் இருந்து "அர்ஜுனரு வில்லு" பாடல் பாடும் போது அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் தங்களது செல்போனை டார்ச் அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடத் தொடங்கினர். இந்த இசை கச்சேரியின் கடைசி பாடலாக "கில்லி"யில் இடம்பெற்ற "அப்படி போடு போடு" என்ற பாடல் பாடப்பட்டது.
இந்த இசை கச்சேரியில் மொத்தம் 23 பாடல்கள் பாடப்பட்டன.
அவை
- மேகமாய் வந்து போகிறேன்
- சக்கரை நிலவே
- மெல்லினமே
- ஒரு பட்டாம்பூச்சி
- மொலச்ச மூணு
- மொட்டு ஒன்று
- என்ன அழகோ
- என்னை தாலாட்ட வருவாளோ
- சின்ன தாமரை
- சொல்லாமலே
- தலைவா தலைவா
- எல்லா புகழும்
- நீ யாரோ
- தேன் தேன்
- ஆளப்போறான் தமிழன்
- குருவி குருவி
- மாச்சோ
- ஒரு பொண்ணு ஒன்னு
- கூகுள் கூகுள்
- அர்ஜுனர் வில்லு
- ஹேப்பி நியூ இயர்
- அப்படி போடு
- புலி உறுமுது












Click it and Unblock the Notifications