அமெரிக்கா: 1 முதல் 8 வயது 5 குழந்தைகளை கொன்று குப்பை பையில் போட்டு வீசிய தந்தை கைது
அலபாமா: அமெரிக்காவில் 5 குழந்தைகளை கொன்று குப்பை பையில் போட்டு நெடுஞ்சாலையோரம் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்தவர் திமோதி ரே ஜோன்ஸ்(32). அவருக்கு 1 முதல் 8 வயது வரையில் 5 குழந்தைகள் இருந்தனர். அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார். ஜோன்ஸ் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தைகளை தொடர்பு கொள்ள ஜோன்ஸின் முன்னாள் மனைவி முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அவர் குழந்தைகளை காணவில்லை என்று கடந்த 3ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் போலீசார் குழந்தைகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜோன்ஸ் குழந்தைகளை கொன்று அவர்களின் உடல்களை குப்பை போடும் பைகளில் தனித்தனியே வைத்து வாகனத்தில் எடுத்துச் சென்று அலபாமா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே வீசிவிட்டார்.
அதன் பிறகு போதைப் பொருள் உட்காண்டு மிசிசிபி மாநிலத்தில் உள்ள ஸ்மித் கவுன்ட்டி வழியாக வந்த ஜோன்ஸின் காரை போலீசார் நிறுத்தினர். அப்போது ஜோன்ஸ் போதையில் இருப்பது தெரிந்தது. மேலும் காரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், ரத்தம் இருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அவர் 5 குழந்தைகள் காணாமல் போன வழக்கில் தேடப்படும் நபர் என்பதை அவர்கள் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்களின் உடல்களை வீசிய இடத்தை தெளிவாக கூறவில்லை. இதையடுத்து அவரையே சம்பவ இடத்திற்கு போலீசார் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனர். அப்போது அவர் குழந்தைகளின் உடல்களை வீசிய இடத்தை காண்பித்தார். அந்த பைகளை திறந்தபோது குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications