மாயஜால சக்திகளுக்காக பொக்கிஷமான குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாயாஜால சக்திகளுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியைச் சேர்ந்தவர் அலிநவாஸ் ஹஸ்ரி . வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க மாயாஜாலம் மற்றும் மாந்திரீக சக்தி பெற விரும்பினார்.

மாயாஜால சக்தி மூலம் இரும்பை தங்கமாகவும், வெள்ளியாகவும் மாற்றி அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக விரும்பினார். அதற்கு தனது குழந்தைகளை பலி கொடுக்க துணிந்தார்.
அதற்காக குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவுடன் விருந்து வைக்கும்படி தனது மனைவியை வற்புறுத்தினார். அதற்கு மறுத்த அவர் தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீதம் 5 குழந்தைகள் வீட்டில் இருந்தனர். இதற்கிடையே அவர் மனைவி இல்லாத இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். தனது 5 குழந்தைகளையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
அவர்களின் பிணங்களை படுக்கை அறையில் கிடத்தி வைத்தார். கொலை செய்யப்பட்ட குழந்தைகள் 3 முதல் 13 வயது நிரம்பியவர்கள் ஆவர். தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி அலி நவாஸ் லஹ்ரி மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications