கோலெர் கருவி டாட்டூ... மச்சம் டாட்டூ - குழந்தைகளுக்காக பெற்றோரின் சிலிர்க்க வைக்கும் தியாகங்கள்!
லண்டன்: லண்டனில் காது கேளாத குழந்தையின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் விதமாக அவள் காதில் அணிந்திருக்கும் கோலெர் கருவி என்னும் மூளைக்கு ஒலியை அனுப்பும் மின்னணு சாதனம் அமைப்பைப் போலவே தானும் ஒரு டாட்டூ வரைந்திருக்கிறார் அவளின் தந்தை.
டுவிட்டரில் "லெஜண்ட்" என்கிற பெயரோடு பகிரப்பட்ட இவர்களின் புகைப்படம் அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது. எனினும், அந்த தந்தை, மகள் கூட்டணியை அடையாளம் கண்டறிய முடியவில்லை.

இதேபோல, ஹனி-ரே என்கிற தம்பதி அவர்களது மகளது காலில் பரவலான இருக்கும் மச்சங்கள் அவளது மனநிலையைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக அதைப்போலவே தாமும் டாட்டூ குத்திக் கொள்ள முடிவுசெய்தனர்.
மகளின் உடல் அவளை பயமுறுத்தக் கூடாது என்பதற்காக இப்படி தான் செய்தது மிகச்சரியான செயல் எனக் கருதுகிறார் அந்த குழந்தையின் தாய். இப்போதெல்லாம் அவர்களது மகள் தாய், தந்தையின் அந்த டாட்டூவைப் பார்த்து பூரிப்புடன் "மேட்ச்" என்கிறாளாம் அக்குழந்தை.












Click it and Unblock the Notifications