கோமா நிலையில் இருந்து பேச முயற்சிக்கிறார் ஷூமேக்கர்.. நேரில் பார்த்த சகவீரர் பெலிப் தகவல்
பெர்லின்: விபத்துக் காரணமாக கோமாவில் இருக்கும் பிரபல கார் பந்தய வீரர் ஷூமேக்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பேச முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார் மற்றொரு கார் பந்தய வீரரான பெலிப் மாசா.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பார்முலா1 கார் பந்தய ஜாம்பவனான மைக்கேல் சூமாக்கர் கடந்தாண்டு டிசம்பர் 29-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் பனி சறுக்கு விளையாடுகையில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு தள்ளப் பட்ட ஷூமேக்கர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷூமேக்கரை கோமா நிலையில் இருந்து மீட்க டாக்டர்களும், அவரது குடும்பத்தினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஷூமேக்கர் தற்போது கோமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து சமீபத்தில் ஷூமேக்கரை மருத்துவமனையில் சென்று பார்த்த அவரது சக கார்பந்தய வீரரான பெலிப் மாசா கூறியுள்ளதாவது:-

பதிலளிக்க முயற்சி...
‘படுக்கையில் சூமாக்கரை பார்க்கையில் சாதாரணமாக தூங்குவது போல் தான் தெரிகிறது. அவர் வாயை அசைத்து பதிலளிக்க முயற்சிக்கிறார்.

மகிழ்ச்சி....
அவருடன் நேரத்தை செலவிட முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியின் செயல்பாடு, புதிய கார் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசினேன்.

ஊக்கம்....
என்னால் முடிந்த அளவு அவருக்கு சிறப்பான ஊக்கத்தை அளிக்க முயற்சி செய்தேன். அவர் வலுவான மனிதர். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என இவ்வாறு பெலிப் தெரிவித்துள்ளார்.

மனைவியின் முயற்சி...
ஷூமேக்கரை கோமாவிலிருந்து மீட்கும் முயற்சியாக தொடர்ந்து அவரது காதில் அவரது மனைவி கதைகள் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications