ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... இசைமழை தருகிறார்கள் நிரஞ்சனா இரமணன், ஸ்ரதா கணேஷ்
இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைமழை பொழியவிருக்கிறார்கள் சூப்பர் சிங்கர் பாடகிகள், நிரஞ்சனா இரமணன் மற்றும் ஸ்ரதா கணேஷ்.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, சூப்பர் சிங்கர் பாடகிகள், நிரஞ்சனா இரமணன் மற்றும் ஸ்ரதா கணேஷ் ஆகியோர் பங்கேற்று இசைப்பாடல்களை வழங்கிட உள்ளனர்.
திரைப்படப் பின்னணிப் பாடகி நிரஞ்சனா இரமணன்
சென்னையைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த பாடகருக்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார். அண்மையில் வெளிவந்த "மருது" தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

இவரின் இசை நிகழ்ச்சி வரும் 30ம் தேதி அமெரிக்க நேரப்படி மாலை 6 முதல் 9.30 மணி வரை ஜூலை 2ம் தேதி மாலை 6 மணிக்கு திரை மெல்லிசை விருந்தும் தமிழ்ப் பேரவை விழாவில் நடக்கவுள்ளது.
பாடகர் ஸ்ரதா கணேஷ்
ஸ்ரதா கணேஷ் அகில இந்திய வானொலிக் கலைஞரான தன் பாட்டி பார்வதி இராமன் இளம் பிராயத்திலிருந்தே இசை கற்று வருபவர்.
அமெரிக்கா, கனடா, வளைகுடா நாடுகளிலும் இந்தியாவிலும் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். பல விருதுகளை பல அமைப்புகளிடமிருந்து பெற்றிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு திறம்பட பாடிப் புகழ் பெற்றவர். கனடா நாட்டைச் சார்ந்த அக்னி இசைக்குழுவினூடாக பல இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறார்.
இசைஞானி இளையராஜாவின் முன்னிலையில் பாடியிருக்கிறார். பேரவைத் திருவிழாவில் நடக்கவிருக்கும் மெல்லிசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று நம்மையெல்லாம் இன்னிசையில் மகிழ்விக்கவிருக்கிறார்.
இவரின் நிகழ்ச்சிகள், வரும் 30ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், ஜூலை 2ம் தேதி மாலை 6 மணிக்கு திரை மெல்லிசை விருந்தும் மெயின் ஆடிட்டோரியத்தில் நடக்கவுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications