ஃபெட்னா விருது அறிவிப்பு... சிறந்த படம்: சதுரங்க வேட்டை, சிறந்த இயக்குனர்: கார்த்திக் சுப்பராஜ்!
சான் ஓசே(யு.எஸ்): வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை (ஃபெட்னா) சார்பில் ஆண்டு தோறும் தமிழ் விழா நடத்தப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு விழா ஜூலை 2 முதல் 5 வரை கலிஃபோர்னியாவின் சான் ஓசே நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முதன் முறையாக சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த படமாக சதுரங்க வேட்டை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது, சிறந்த இயக்குனராக கார்த்திக் சுப்பராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

20 படங்கள் தேர்வு
அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் இடமெல்லாம் தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விஜய் படங்களுக்கு தமிழகம் போல் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுவதும் வாடிக்கையாகி விட்டது.
இந் நிலையில், அமெரிக்கத் தமிழர்களின் வாக்கெடுப்பு மூலம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனரை தேர்வு செய்து விருது வழங்க பேரவை முடிவு செய்தது.

20 படங்கள்
முதலில் 2014 ஆம் ஆண்டு வெளியான 20 படங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வுக்குழுவினரின் பார்வைக்கு அனுப்பப் பட்டது. அவற்றிலிருந்து ஐந்து படங்களை தேர்வுக் குழுவினர் வாக்கெடுப்புக்கு பரிந்துரைத்தனர்.

ஐந்து படங்கள் - ஐந்து இயக்குனர்கள்
தேர்வுக்குழுவினர் ஆய்வு செய்து பரிந்துரைந்த ஐந்து படங்கள்:
பண்ணையாரும் பத்மினியும்
ஜீவா
மெட்ராஸ்
தெகிடி
சதுரங்க வேட்டை

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இயக்குனர்கள்
சுசீந்திரன் (ஜீவா)
ரமேஷ்(தெகிடி)
அருண்குமார்(பண்ணையாரும் பத்மினியும்)
கார்த்திக் சுப்பராஜ்(ஜிகர்தண்டா)
பா.ரஞ்சித் (மெட்ராஸ்)

வாக்களித்த அமெரிக்கத் தமிழர்கள்
தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் இயக்குனர்கள் விவரங்கள் முந்தய ஆண்டு ஃபெட்னா விழாக்களில் பங்கேற்றவர்கள் மற்றும் இந்த ஆண்டு விழாவுக்கு ஜூன் 7ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்தவர்களுக்கு எலெக்ட்ரானிக் வாக்கெடுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் பங்கேற்றர்வகளில் ஏகோபித்த ஆதரவைப் பெற்று சதுரங்க வேட்டை சிறந்த படமாகவும், கார்த்திக் சுப்பராஜ் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

தமிழ் விழாவில் விருது
சான் ஓசே நகரில் நடைபெறும் விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட உள்ளது. விழாவில் மாதவன், எமி ஜாக்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். தமிழறிஞர்கள், அமெரிக்கத் தமிழ் சாதனையாளார்கள், தொழில் முனைவோர்கள் உட்பட ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

மேற்குப் பகுதியில்
ஹரிசரண், ஆலப்ராஜு மற்றும் பலர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது நடத்திக் கொடுக்க உள்ளார். இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகளுடன், முதன் முறையாக அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் விழா நடை பெற உள்ளது.

வெற்றியாளர்களுக்கு அழைப்பு
சிறந்த படமான சதுரங்க வேட்டையின் தயாரிப்பாளர் மனோபாலா மற்றும் சிறந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் விழாவில் பங்கேற்று விருது பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரில் விருது பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு அவர்கள் வர இயலாத பட்சத்தில் சென்னையில் டிசம்பர் மாதம் பேரவையின் சார்பில் நடைபெறும் தமிழ் இசை விழாவின் போது விருது வழங்கப்படும்.
தமிழ் விழாவில் பங்கேற்க, வட அமெரிக்கா முழுவதிலிருந்தும் தமிழர்கள் சான் ஓசே நகரத்தை உள்ளடக்கிய சிலிக்கான் வேலிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications