ஒன்- ஆன்- ஒன் சண்டை போட்ட கங்காருக்கள்...வைரலான கங்காரு பாக்சிங் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் நடு சாலையில் இரவில் பாக்சிங் விளையாடிய கங்காருக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடு சாலையில் இரவில் பாக்சிங் விளையாடிய கங்காருக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த வித்தியாசமான வீடியோவை ஆஸ்திரேலியாவின் விக்ட்டோரிய காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கங்காருக்கள் மாற்றி மாற்றி மோசமாக தாக்கிக் கொள்வது பதிவாகியுள்ளது.

பொதுவாக கங்காருக்கள் மிகவும் கோபமான விலங்குகள் என கூறப்படும். அமைதியாக இருக்கும் கங்காருகள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே கோபம் அடைந்து மோசமாக தாக்கக் கூடிய குணம் கொண்டது. இதன் மூர்க்கத் தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்பது கடினமான செயல்.

Fight between kangaroos caught on camera!

கங்காருக்கள் அதிகம் வசிக்கும் நாடான ஆஸ்திரேலியாவில் அது குறித்த வீடியோக்களும் பிரசித்தம். கங்காரு மனிதர்களை தாக்குவதை போன்றும், விரட்டி விரட்டி உதைப்பது போன்றும் நிறைய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. கங்காருக்குள் மனிதர்களை தாக்குவது மிகவும் இயல்பான காரியமாகவே ஆஸ்திரேலியாவில் மாறிவிட்டது.

இந்த நிலையில் இரண்டு கங்காருக்கள் தங்களுக்குள்ளே மாற்றி மாற்றி தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவின் விக்ட்டோரிய காவல் துறை வெளியிட்டுள்ளது. ரோந்து பணிக்காக ஹெலிகாப்டரில் கேமரா பொருத்தி சென்ற போது இந்த வீடியோ அதில் பதிவாகி இருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது "இரண்டு கங்காருக்கள் சண்டை இடுவது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். மிக முக்கியமான காரணம் இருந்தால் மட்டுமே இது போன்ற சண்டைகள் நடக்கும். இதற்கான காரணம் என்ன என்பதை வீடியோவில் இருந்து கணிக்க முடியவில்லை. அவை மிகவும் வலிமையான விலங்கு என்பதால், இந்த சண்டையில் எந்த பாதிப்பும் அதற்கு ஏற்பட்டிருக்காது" என்று கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+