‘கேஸ் ப்ராப்ளம்’.. நடுவானில் மோதிக் கொண்ட பயணிகள்... வியன்னாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!
பயணி ஒருவர் வாயு வெளியேற்றியது தொடர்பான பிரச்சினையால் வியன்னாவில் துபாய் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
துபாய்: பயணிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, அவசரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்படக் காரணம் அதில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிக் கொண்டிருந்தது தான் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலுக்கான காரணம் இரண்டு பயணிகளில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிய வண்ணம் இருந்தது தான் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட பயணி விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பயணியிடம் சென்று நிலைமையை விளக்கியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர் வாயு வெளியேற்றவே மோதல் உருவானதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வாயு வெளியேற்றிய பயணி ஏதேனும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனபோதும், இந்தப் பிரச்சினையால் மோதல் அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை வியன்னாவில் தரையிறக்கியுள்ளார். பின்னர் ஆஸ்திரியா போலீசார் மோதலில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பின்னர் வேறு விமானம் மூலம் வியன்னாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லப்படுவர் என ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications