சவுதி: ரூ.6.64 கோடி நஷ்டஈடு தரத் தவறிய பிலிப்பைன்ஸ் கொலையாளியின் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளிக்கத் தவறியதை அடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் ஜோஸ்லிடோ லிடாசான் ஜபான்டா(35). டைல்ஸ் போடுபவரான அவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அவர் சூடானை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாகவும், கொள்ளையடித்ததாகவும் ரியாத் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜபான்டாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளித்தால் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜபான்டாவின் குடும்பத்தார் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசால் ரூ.3 கோடியே 24 லட்சம் தான் திரட்ட முடிந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக் கொண்டு ஜபான்டாவுக்கு மன்னிப்பு வழங்க கொலையானவரின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை பொது இடத்தில் வைத்து ஜபான்டாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications