வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு
வியன்னா ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம்.
பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

நாகரீகம்.. ப்ளீஸ்
ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முத்தம் கூடவே கூடாது
தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

முத்தச் சத்தம் தாங்க முடியலை..
வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

ஹலோ..நான் பேசுறது கேட்குதா..
அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.

சீனச் சாப்பாடு, கபாபுக்கும் தடை
அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து மொச்சக் மொச்சக் என்று சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.

ஆள் வைத்துப் பிடிப்பார்கள்
இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும், தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

நிர்வாணத்திற்கும் தடை
இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் குஜால்
ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.

குதிரையுடன் வந்த ஜாக்கி
இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications