தென்கொரிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

தென்கொரிய மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென்கொரிய மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவின் சியோல் நகரின் மிர்யாங் பகுதியில் செஜாங் என்ற மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை ஆறு அடுக்குமாடிகளை கொண்டுள்ளது.

இங்கு நோயாளிகள் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் நேற்று இருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் தீ

மருத்துவமனையில் தீ

மருத்துவமனையில் உள்ள எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் தளங்களுக்கும் வேகமாக பரவியது.

பலர் படுகாயம்

தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்தனர்.

வழியிலேயே உயிரிழப்பு

முதற்கட்டமாக தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எகிறிய பலி எண்ணிக்கை

இந்நிலையில் அடுத்த சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் 41 ஆக அதிகரித்தது. படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பலர் கவலைக்கிடம்

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மாற்றும் வழியில்

முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் இருந்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மற்ற மருத்துவமனைக்கு மாற்றும் வழியில் உயிரிழந்தனர்.

15ஆண்டுகளில் இல்லாத..

தென்கொரியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கொடூர தீ விபத்து இது என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. குளிர்கால ஓலிம்பிக் போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான வீரர்களும் பார்வையாளர்களும் வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தென்கொரியாவில் இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+