பசி... அகோரப் பசி... சட்டி நிறைய நூடுல்ஸை தனி ஆளாக தின்று தீர்த்த சீன தீயணைப்பு வீரர்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சட்டி நிறைய நூடூல்ஸை சாப்பிடும் காட்சி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இவர் ஒரு தீயணைப்பு வீரர் ஆவார்.
நம்ம ஊரிலும் நூடுல்ஸ் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் நூடூல்ஸை உயிர் போல நேசிக்கும் சீனர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவுக்கு நூடுல்ஸின் உயிர் ரசிகர்கள் அவர்கள்.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த பூ வென்மிங் என்ற தீயணைப்புப் படை வீரரின் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. காரணம், அவர் ஒரு பெரிய சட்டி நிறைய நூடூல்ஸை போட்டு ஆற அமர சாப்பிடுவது போல அது உள்ளது.

தனி ஒருவனாக...
3 அல்லது நான்கு பேர் சாப்பிடக் கூடிய நூடுல்ஸை தனி மனிதனாக இந்த வென்மிங் ஒரு கை பார்க்கிறார். ஒரு சின்ன பீஸ் கூட விடாமல் வழித்தெடுத்து விடுகிறார் சட்டியை.

வைரல்...
இதை பேஸ்புக்கில் சிசிடிவி நியூஸ் என்ற இதழ் பகிர்ந்துள்ளது. இதை இப்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர். லைக்குகளும் குவிகின்றன. பசியோடு இருக்கும் யாராவது இந்தப் படத்தைப் பார்த்தால் வாயிலிருந்து வாட்டர் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது.

அகோரப் பசியாம்...
ஒரு தீயணைப்புப் பணிக்காக போய் விட்டுத் திரும்பிய பிறகு வென்மிங் உள்ளிட்ட சக வீரர்கள் சாப்பிடப் போயுள்ளனர். அப்போதுதான் இப்படி சட்டி நிறைய நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார் வென்மிங். அப்போது சரியான பசியில் இருந்துள்ளார் வென்மிங். இதனால் நூடூல்ஸை அவர் ஒகு கை பார்த்து விட்டாராம்.

இன்னும்... இன்னும்...
முதலில் வழக்கம் போலத்தான் சாப்பிட்டுள்ளார். ஆனால் பசி தீரவில்லை என்பதால் அருகில் இருந்த சட்டியை எடுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். சட்டியை காலி செய்து விட்டுத்தான் அங்கிருந்து எழுந்துள்ளார்.

தவறேதுமில்லை...
இதுகுறித்து அவர் கூறுகையில், "தொடர்ந்து வேலை இருந்தது. ரெஸ்ட்டே இல்லை. பசி வேறு பயங்கரமாக இருந்தது. இதனால்தான் அவ்வளவையும் சாப்பிட்டு விட்டேன். இதில் தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஓய்வில்லாமல் உழைப்பு...
இப்படி வெறித்தனமாக நூடூல்ஸை சாப்பிட்ட வென்மிங், அதற்கு முன்பு 2 நாட்கள் ஓய்வே எடுக்காமல் வேலை பார்த்தாராம். இதை அவரது சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications