முதுகில் குத்தும் ஈரான்.. டென்ஷன் ஆன இந்தியா! இந்த விஷயத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹார்முஸ் நீரிணையில் பயணித்த இந்திய கப்பல் மீது, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டித்திருக்கிறது.

ஈரான் போரால் பாதிக்கப்பட்டபோது.. இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்தது. இப்படி இருந்தும், இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்துவது, முதுகில் குத்துவதற்கு சமம். எனவே இந்தியா இந்த விஷயத்தில் டென்ஷனாகியிருக்கிறது.

MEA Summons Iranian Ambassador

இந்தியா கண்டனம்

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த 2 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நேரில் விளக்கமளிக்க, டெல்லியில் உள்ள ஈரான் தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்தது. இந்திய வெளியுறவுச் செயலாளர், ஈரான் தூதரைச் சந்தித்து இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பதிவு செய்தார்.

ஈரான் இதை செய்யனும்

இந்த சந்திப்பின்போது, வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை வெளியுறவுச் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பு இந்தியாவிற்கு வரும் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் உதவியதை நினைவு கூர்ந்த அவர், மீண்டும் அதே போன்ற பாதுகாப்பான சூழலை ஈரான் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிலைமை சரியாகும்

துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களைத் தவிர்த்து, இந்தியாவிற்கு வரும் கப்பல்கள் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி கடக்க ஈரான் அரசு உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுச் செயலாளர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஈரான் தூதர், இந்தியாவின் இந்த கவலைகளையும் கருத்துகளையும் தனது நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் கேம்

ஈரான் விஷயத்தில், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவதை போல செயல்பட்டு, தற்போது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக, ஈரானின் துறைமுகங்களை போர் கப்பல்களை கொண்டு முற்றுகையிட்டிருக்கிறது. எனவே, உலகின் கச்சா எண்ணெய் சப்ளையின் முதுகெலும்பாக இருக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+