யார்ன்னு பார்த்தீங்களா.. பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு மைக்கை உடைத்து.. வெலவெலத்து போன இணையம்
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமர் இப்போதுதான் பதவியேற்றுள்ளார்.. ஆனால் அதற்குள் அவரை பற்றின ஒரு வீடியோ வெளியாகி பகீரை கிளப்பி கொண்டிருக்கிறது.
Recommended Video
இத்தனை மாத கால அரசியல் குழப்பம், பாகிஸ்தானில் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.. இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது..
கடந்த 8ம் தேதி துவங்கிய இந்த நடவடிக்கைகளால், அந்த நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது... சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நடந்து முடிந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் பதவியை இழந்தார்.

பாகிஸ்தான்
எனவே, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.. இந்த பிரதமர் பதவிக்கு போட்டியிட, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் மற்றொரு புறம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி சார்பில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனாலும் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, அனைவரும் ராஜினாமா செய்வதாக குரேஷி அறிவித்தார்.

அரசியல் அனுபவம்
மேலும், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து, அனைத்து எம்பிக்களுடனும் வெளிநடப்பு செய்தார்.. இதையடுத்து, 174 பேரின் ஆதரவுடன், ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்... முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. இவருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.. பஞ்சாபின் முதல்வராக மூன்று முறை இருந்தவர்.. அரசியல் அனுபவம் பெற்றவர். இவர் பிரதமராக பதவியேற்று கொண்டதையடுத்து பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மோசமானது
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பார்லிமென்டில் ஷெபாஸ் பேசும்போது, "மோசமான ஒன்றை நல்லது வென்றுள்ளது... இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வெளிநாட்டு சதியின் பின்னணியில் தாக்கல் செய்ததாக கடந்த கால அரசு விமர்சிக்கிறது.. ஆனால் அதில் கொஞசமும் உண்மையில்லை.. பார்லிமென்டின் பாதுகாப்பு குழு இதை பற்றி விசாரித்து, நாங்கள் சதி செய்தது அதில் உறுதியானால், இந்த பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவேன்" என்று அறிவித்து அதிரடி கிளப்பி உள்ளார்.

மைக் உடைந்தது
இந்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது ஷெபாஸ் ஷெரீப் பற்றின வீடியோ தான்.. ஏதோ ஒரு பொது மேடையில் இவர் பேசிக் கொண்டே இருக்கும்போது, ஆத்திரத்தில் மைக்குகளை உடைத்தெறிகிறார்.. கூட்டத்ல் பேசிக்கொண்டிருக்கும்போதே, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அவருக்கு முன்னே இருக்கும் சில மைக்குகளை அவர் உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.. இப்படி மைக் உடைப்பதை பார்த்ததும், "இவரா புது பிரதமர்" என்று மக்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications