இதுதான் முதல்முறை! மங்கி பாக்ஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.. லேசான பாதிப்பு உயிரை கொன்றது எப்படி
ரியோ டி ஜெனிரோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்த நோயால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது.
மங்கி பாக்ஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் பாதிப்பு தான் என்றாலும் கூட அது ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும்.

மங்கி பாக்ஸ்
இதையடுத்து மங்கி பாக்ஸ் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல நாடுகளும் மங்கி பாக்ஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன. உலக சுகாதார அமைப்பும் கூட மங்கி பாக்ஸ் பாதிப்பை பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து மங்கி பாக்ஸ் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல நாடுகளும் மங்கி பாக்ஸ் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளன. உலக சுகாதார அமைப்பும் கூட மங்கி பாக்ஸ் பாதிப்பை பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் உயிரிழப்பு
இதனிடையே மங்கி பாக்ஸ் காரணமாக உயிரிழப்பு பதிவாகி உள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். பிரேசில் நாட்டில் சுமார் 41 வயது நபர் உயிரிழந்தார். பெரும்பாலும் மங்கி பாக்ஸ் பாதிப்பு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது.. இந்தச் சூழலில், மங்கி பாக்ஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

என்ன காரணம்
இருப்பினும், அந்த நபருக்குத் தீவிர நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவரது உடல்நிலை சிக்கலானதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசில் நாட்டில் அவருக்கு மங்கி பாக்ஸ் தொற்றுக்கும் இதர பாதிப்புகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்ததாகப் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில்
பிரேசில் நாட்டில் மங்கி பாக்ஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. அங்கு சுமார் 1,000 பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெரும்பாலும், பிரேசில் தென்கிழக்கு மாகாணங்களில் தான் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது. அங்குக் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐரோப்பா சென்று வந்த ஒருவருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், வெறும் சில வாரங்களில் வைரஸ் பாதிப்பு ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

குரங்கு அம்மை
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். உலகெங்கும் கடந்த சில மாதங்களில் மட்டும் 18,000 பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இப்போது பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த பாதிப்பு வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications