என்னங்க கொடூரம் இது.. கொரியரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஹய்யோ.. அலறிய அதிகாரிகள்.. ஏன்?
உக்ரைன் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ளன
உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக போர் நடந்து கொண்டே வருகிறது.. இரு தரப்பிலுமே போரை நிறுத்துவது போல தெரியவில்லை.. இரு தரப்பு ராணுவ வீரர்களுமே ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.. இன்னமும் உயிரிழந்தும் வருகின்றனர்.
இதில், உக்ரைன் நாட்டு மக்கள் கதிகலங்கி போய்விட்டார்கள்.. உயிரை கையில் பிடித்துக் கொண்டு, அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.. மேலும், உக்ரைன் நாட்டில் ஏகப்பட்ட உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை உலக நாடுகளால் மறக்க முடியாது.

விலங்கு
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் பார்சல்கள் வந்துள்ளன.. அந்த பார்சல்கள் எல்லாமே ரத்த பார்சல்கள்.. விலங்குகளின் கண்கள் அந்த பார்சலில் இருந்துள்ளன.. மாட்ரிட்டில் தூதரகத்திற்கு நேற்றுகூட, விலங்குகளின் கண்கள் அடங்கிய ஒரு பார்சல் கிடைத்தது... பொதுவாக, இப்படியான பார்சல்களில் வெடிபொருட்களை வைத்து விஷமிகள் அனுப்புவார்கள்.. ஆனால், விலங்குகளின் கண்கள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. யார் இந்த காரியத்தை செய்தது என தெரியவில்லை.

ரத்தப் பார்சல்கள்
ரத்த பார்சல்களை பார்த்துமே அங்கிருந்தோர் அலறிப்போய்விட்டனர்.. இதெல்லாம் நிச்சயம் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேலையாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.. அவர்கள்தான் இப்படிப்பட்ட பார்சலை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.. எனினும், மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. இதற்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் அந்த விசாரணையும் நடக்கிறது.

ரத்த பார்சல்
இது தொடர்பாக உக்ரைன் செய்தித்தொடர்பாளர் சொல்லும்போது, "விலங்குகளின் கண்கள் அடங்கிய ரத்த பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.. சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.. ரத்த பார்சல்களால் உக்ரேனில் மறுபடியும் பதற்றமும், பரபரப்பும் சூழ்ந்து வருகிறது.

தூதரகங்கள்
இப்படித்தான், மாட்ரிட்டில் உள்ள அமெரிக்கா, உக்ரைன் நாடுகளின் தூதரகங்களுக்கு சமீபத்தில் கடித வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருந்தன.. இதில் உக்ரைன் தூதரகத்திற்கு வந்த குண்டு வெடித்ததில், ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். அதேமாதிரி, அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த கடித வெடிகுண்டு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது... ஸ்பெயின் முழுவதும் பல்வேறு தூதரகங்கள் மற்றும் ராணுவ படைத்தளத்திற்கு அனுப்பப்பட்ட 6 கடித வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிலியோ கிலி
இப்படி கடித பார்சல் அனுப்பி கிலியை உண்டுபண்ணியிருந்த நிலையில், அந்நாடு முழுவதும் பதற்றம் அப்போது நிலவியது. முதலில் கடிதம் மூலமாகவும், இப்போது பார்சல் மூலகவும் பீதியை கிளப்பி விட்டுள்ளார்கள் ரஷ்ய வீரர்கள் என்கிறார்கள்.. இந்த ரத்த பார்சல்களை அனுப்பியவர்கள் குறித்து ஸ்பெயின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications