அணுக்கதிர் வீச்சால் அதீத வளர்ச்சியில் மீன்கள்? - சந்தேகத்தின் பிடியில் ஜப்பான் மக்கள்
டோக்கியோ: ஜப்பானில் அணு உலை கதிர்வீச்சால் மீன்கள் கூட உருமாறி வருவதாக மக்கள் சந்தேகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
ஜப்பானிய மீனவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்கவே பயங்கரமாக இருப்பதால் புகுஷிமா அணு உலை சிதறியதால் பாதிக்கப்பட்டு அது இவ்வாறு உருமாறியிருக்குமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பானில் டால்பின் மீன்களை பிடிக்கும் சீசன் இம்மாதம் முதல் தொடங்கியுள்ளது.

ஆறடி உயர மீன்:
இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி உயரத்தில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.
வேற்றுகிரக வாசி தோற்றம்:
இந்த மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது வேற்றுலக வாசியா? இல்லாவிட்டால் புக்குஷிமா அணு உலை சிதறியதால் ஏற்பட்ட மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.
உல்ஃப் மீனின் வளர்ச்சி:
எனினும், இது "உல்ஃப்" மீன் வகை என ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். பொதுவாக உல்ஃப் மீன்கள் 4 அடி வரை வளரும், இந்த மீனின் அதீத வளர்ச்சியே மக்களை பீதியடைய வைத்துள்ளது.
ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்:
இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications