சிட்னியில் தீவிரவாதி பறக்கவிட்டது சிரியாவின் ஜபாத் அல் நுஸ்ரா இயக்கத்தின் கொடி!!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காபி ஹோட்டலில் துப்பாக்கி முனையில் பொதுமக்களை சிறைபிடித்துள்ள தீவிரவாதி பறக்கவிட்டது சிரியாவில் செயல்பட்டு வரும் ஜபாத் அல் நுஸ்ரா என்ற பயங்கரவாத அமைப்பின் கொடி எனத் தெரியவந்துள்ளது.

சிட்னியின் மிக முக்கியமான பகுதியில் அமைந்துள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி முனையில் பல மணிநேரம் சிறை பிடித்து வைத்துள்ளான். அந்த தீவிரவாதியின் துப்பாக்கி முனையில் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Flag waved at Sydney cafe siege not the ISIL flag

அத்துடன் அந்த தீவிரவாதி அரபி மொழியிலான வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஒன்றை பறக்க விட்டான். அந்த கொடியானது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியைப் போன்ற சாயலில் இருந்தது. ஆனால் அந்த அமைப்பின் கொடி இல்லை என்று ஆஸ்திரேலியா பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதி பறக்கவிட்ட கொடியானது, சிரியாவில் இயங்கிவரும் ஜபாத் அல் நுஸ்ரா இயக்கத்தின் கொடி என தெரியவந்துள்ளது. இந்த இயக்கம் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையது. சிரியா அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஜபாத் அல் நுஸ்ரா இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+