நம்மூர் டிவி சேனல் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு வார்னிங்.. அமெரிக்காவில் நடந்த விபரீதத்தை பாருங்கள்
வாஷிங்டன்: ரியாலிட்டி டிவி ஷோக்கள் பெருகிவிட்ட இந்த நேரத்தில் ஒரு எச்சரிக்கை சம்பவம் அமெரிக்க டிவி சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடந்துள்ளது.
சீரியல்கள், சினிமாக்கள் என்று இருந்த டிவி சேனல்களின் ஒளிபரப்பு ஸ்டைலை மாற்றியமைத்துள்ளன ரியாலிட்டி ஷோக்கள். அச்சம் தவிர் போன்ற ஷோக்கள் இதற்கு உதாரணம்.

பார்வையாளர்கள் நாடித் துடிப்பை எகிற வைத்து, டிஆர்பியை கூட்டிக்கொள்வது இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம். இப்படித்தான் அமெரிக்காவின் என்பிசி சேனல் 'அமெரிக்காஸ் காட் டேலன்ட்' ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்ித வருகிறது.
இதில் கத்தி, வாள் போன்றவற்றை விழுங்கும் மேஜிக் நிபுணரான ரியான் ஸ்டாக் அவரது காதலி அம்பேர் லைன் வால்க்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
பல சாகசங்களை செய்து காட்டிய பிறகு, வாய்க்குள் கத்தியை விட்டபடி, அதன் அடிப்பகுதியை தீ எரியும் அம்பை கொண்டு தாக்குமாறு காதலியிடம் சொன்னார் ரியான் ஸ்டாக். அவரும் வில்லில் நெருப்புடன் கூடிய அம்பை பூட்டி, எய்தார்.
ஆனால், வாயில் வைத்திருந்த பொருளில் படாமல், நெருப்புடன் சென்ற அம்பு, ரியான் ஸ்டாக் கழுத்து பகுதியில் பாய்ந்தது. இதனால், குளிர்பான பாட்டிலுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷோ நடுவர்கள் முகத்தில் அதிர்ச்சி பாய்ந்தது.
ஒருவழியாக முதலுதவி செய்து காயமின்றி தப்பியுள்ளார் ரியான் ஸ்டாக். உஷாரய்யா.. உஷாரு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications