குண்டாக இருந்த பெண் ஊழியரை விமானத்தில் கீழே இறக்க விட்ட சீன விமான நிறுவனம்!
பெய்ஜிங்: குண்டாக இருந்த பெண் ஊழியரை ஓவர் வெயிட்டாக இருப்பதாக கூறி விமானத்தில் ஏற்ற அனுமதி மறுத்த விமான நிறுவனத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. விமான நிறுவனம் வகுத்துள்ள எடைக்கும் மேலே அவரது எடை இருந்ததால் இந்த நடவடிக்கையாம்.

அந்த விமான நிறுவனத்தின் பெயர் குயிங்டாவோ ஏர்லைன்ஸ் என்பதாகும். இந்த நிறுவனம் தனது பெண் ஊழியர் ஒருவர் தான் நிர்ணயித்த எடையை விட அதிக எடையில் இருந்ததால் அவர் விமானத்தில் ஏற தடை விதித்துள்ளது. இது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுத்துள்ள விமான நிறுவனம்:
ஆனால் இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அந்த விமான நிறுவனம் மறுத்து விட்டது. எந்த ஊழியருக்கும் தாங்கள் தடை விதிக்கவில்லை என்றும் அது கூறியுள்ளது. இதுகுறித்து மேலும் விளக்கம் அளிக்கவும் அது மறுத்து விட்டது.
உயரம்-அகலம் எல்லாம்:
இந்த விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பெண் ஊழியர்களுக்கான உயரமானது 165 முதல் 172 சென்டிமீட்டர் என்றும் எடை 50 முதல் 68 கிலோ வரை என்றும் போடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மேலும் விமான பெண் ஊழியர்களுக்கான வயது உச்சவரம்பானது 30க்குள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான ஆணைய வரம்பு:
அதேசமயம், சீன விமான ஆணையத்தின் எடை வரம்பானது 73 கிலோ வரை ஏர்ஹோஸ்டஸ் இருக்கலாம் என்று கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications