அன்று எம்.ஹெச் 370....எம்.ஹெச் 17; இன்று ஏர்பஸ் ஏ 321 - தொடர்கதையான விமான விபத்துகள்!
கெய்ரோ: எகிப்திலிருந்து 224 பேருடன் புறப்பட்ட ஏர்பஸ் ஏ 321 விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்து சிதறியது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விமான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்கதையாகியுள்ளது.
விமானப் போக்குவரத்து உலகின் மற்ற எல்லாப் போக்குவரத்துகளைக் காட்டிலும் விலையுயர்வானது. ஆனாலும் அதில் ஆபத்துகளும், அது குறித்த அச்சங்களும் அதிகம். மற்ற விபத்துக்களை விட கோரமான விமான விபத்துக்களாக விமான விபத்துக்கள்தான் அமைந்துள்ளன.
2014 ஆம் வருடத்தில் மட்டும் 8 விமான விபத்துகள் நடந்திருக்கின்றன. பிப்ரவரி 11 ல் அல்ஜீரிய விமானம் லாக்ஹீட் சி 130 ஹெர்குலஸ் முதல் தொடங்கிய விபத்து, டிசம்பர் 28ல் இந்தோனேசிய விமானம் ஏர் ஏசியா 8501 வரை தொடர்ந்தது.

சி 130 ஹெர்குலஸ்:
74 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என 78 பேருடன் அல்ஜீரியாவை நோக்கி சென்று கொண்டிருந்த சி 130 ஹெர்குலஸ், மோசமான வானிலை காரணமாக ஃபெர்டாஸ் மலைச் சிகரத்தில் மோதி நொறுங்கியது. ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தார். மற்றவர்கள் 77 உடல்களாகக் கிடைத்தனர்.

விமானம் 183:
அடுத்த ஐந்தாவது நாளிலேயே நேபாளத்திலும் இதே மாதிரியான விபத்து நடந்தது. நேபாளத்தினை நோக்கிச் சென்று கொண்டிருந்த உள்நாட்டு விமானமான ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 183, நேபாளுக்கு 40 மைல் தொலைவில் திகுரா காடுகளில் உள்ள மலையில் மோதி வெடித்துச் சிதறியது. பின்னர் வந்த கண்காணிப்பு ஹெலிகாப்டர், இடிபாடுகளுக்கிடையில் எரிந்து போய்க் கிடந்த 18 உடல்களை அடையாளம் காட்டியது.

எம்.ஹெச். 370:
உலகத்தையே உலுக்கி எடுத்த நிகழ்வு மார்ச் 8 ஆம் தேதி நடந்தது. அன்று மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி 12 மலேசிய ஊழியர்களைச் சேர்த்து 239 பயணிகளுடன் பயணித்த எம்.ஹச். 370 விமானம் விபத்தாகும். பயணத்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகிய விமானம், திட்டமிடப்பட்ட பாதையில் இருந்தும் விலகியது.

எம்.ஹெச்.17:
அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே அதே மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.ஹச்.17 மாயமானது. கோலாலம்பூரில் இருந்து ஜூலை 17 அன்று புறப்பட்ட எம்.ஹச்.17 ரஷ்ய- உக்ரைன் எல்லைக்கருகில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்நிலையில் உக்ரைன் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 298. அனைவருமே உடல் கருகி பலியானார்கள்.

ஃப்ளைட் 222:
அடுத்த ஆறு நாட்களில் ஜுலை 23 இல் தைவானிலும் விபத்து ஏற்பட்டது. உள்நாட்டு விமானமான ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் ஃப்ளைட் 222, தரையிறங்கும்போது தன் கட்டுப்பாட்டை இழந்து பெங்கு தீவில் ஒரு கட்டிடத்தின் மீது மோதியதில், 48 பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

விமான எண் 5017:
அடுத்த நாளே மறுபடியும் அல்ஜீரியாவில் 118 பேர் விமான விபத்தால் இறந்தனர். ரேடாரில் இருந்து விலகிய இவ்விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

விமானம் 5915:
சர்வதேச எல்லைகளில்தான் விமான விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறு என்பதை அடுத்தடுத்து நிகழும் உள்நாட்டு விபத்துகள் நிரூபித்தன. ஆகஸ்டில் டெஹ்ரானில் இருந்து ஈரானில் உள்ள டாபாஸ் என்ற நகரத்துக்குக் கிளம்பிய சீபஹன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 5915 புறப்பட்டவுடனேயே இன்ஜின் பழுது காரணமாக அஸாதி ஸ்டேடியம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 39 பயணிகள் இறந்தனர்.

இந்தோனேசிய விமானம் 8501:
டிசம்பர் 28ல் சர்பயாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய இந்தோனேசிய ஏர் ஏசியா ஃப்ளைட் 8501, ஜாவா எனப்படும் கடலின் அருகில் சென்று கொண்டிருந்தபோது மாயமானது. தற்போது இவற்றின் தொடர்ச்சியாக

ஜெர்மன்விங்ஸ் 4யூ 9525:
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கடந்த மார்ச் 24 ஆம் தேதியன்று ஜெர்மன் விங்ஸ் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. அந்த மலைப் பகுதியிலுள்ள செய்ன் லெசால்ப்ஸ் கிராமத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் பயணித்த 150 பேரும் உயிரிழந்தனர்.

தொடரும் விமான விபத்துகள்:
தொழில்நுட்பக் கோளாறுகள், விமானிகளின் கவனக்குறைவு, வானிலை மாற்றங்கள், விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பது, காரணங்கள் தெரியாத நிலை போன்றவைகளால் விமானம் விபத்துக்குள்ளாவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications