அந்தோ பாவம்: பெற்ற மகளை திருடன் என தவறாக நினைத்து சுட்டுக் கொன்ற தாய்
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது மகளை திருடன் என தவறாக நினைத்து சுட்டுக் கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓஸ்சிலோ கவுன்ட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வடக்கு கரோலினாவில் வசித்து வந்த அவரின் 27 வயது மகள் தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் வீட்டிற்குள் நுழைந்த சப்தம் கேட்டு கண்விழித்த பெண் திருடன் வந்துவிட்டதாக நினைத்து தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். குண்டடிபட்டு தரையில் விழுந்தது தனது மகள் என்பது தெரிந்த பிறகு அந்த பெண் வேதனையில் துடித்தார். மகளிடன் ஐ லவ் யூ என்று கூறினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி பலியானார். பலியான பெண்ணின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது போலீஸ் அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் பலியானவரின் பெயர் மற்றும் அவரை துப்பாக்கியால் சுட்டவரின் பெயரை வெளியிட வேண்டாம் என செயின்ட் கிளவுட் காவல் துறை பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டது.
பலியான பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications