புளோரிடாவில் 17 பேரை சுட்டுவிட்டு ஹாயாக ஹோட்டலுக்கு சென்ற கொலைகாரன்.. மெக் டொனால்ட்ஸில் ஆட்டம்
புளோரிடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி அதற்கு பின் இரண்டு ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு இருக்கிறான்.
Recommended Video

புளோரிடா: புளோரிடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி அதற்கு பின் இரண்டு ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு இருக்கிறான். கொலைகாரன் நிக்கோலஸ் குரூஸ் இரண்டு ஹோட்டல்களிலும் சாப்பிடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். 2012க்குப் பின் நடந்த மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
போலீஸ் அந்த 19 வயது கொலைகாரனை ஏற்கனவே கைது செய்துவிட்டது. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது.

எஸ்கேப் ஆனான்
அவன் துப்பாக்கி சூடு நடத்தியதும் மிகவும் எளிதாக எஸ்கேப் ஆகியுள்ளான். நடந்தே வெளியே சென்று இருக்கிறான். அங்கு இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி, துப்பாக்கியை பைக்குள் வைத்து எஸ்கேப் ஆகியுள்ளான். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

எப்படி சாப்பிட்டான்
அங்கு இருந்து அவன் வால்மார்ட் ஹோட்டல் ஒன்றிருக்கு சென்றுள்ளான். அங்கு கொஞ்சமாக சாப்பிட்டுள்ளான். பின் நேரடியாக மெக் டொனால்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்று இருக்கிறான். அங்கு 1 மணி நேரம் உடகார்ந்து பொறுமையாக சாப்பிட்டு உள்ளான்.

கைது
சரியாக சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் போலீஸ் அவனை கைது செய்தது. அவன் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆவான். அவனுக்கு அந்த பள்ளி மீதும், உலகம் மீதும் நிறைய வெறுப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே
இவன் இதுகுறித்து 2016லேயே தகவல் கொடுத்துள்ளான். துப்பாக்கி குறித்த யூ டியூப் வீடியோ ஒன்றில் நான் ''பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்த போகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளான். அது குறித்து புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் அப்போது அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications