"நாய் மாதிரி.." கதறி அழுத டெலிவரி ஏஜெண்ட்! அம்மா அப்பாவை பார்த்து கொள்ள கூட முடியவில்லை என வேதனை
பெய்ஜிங்: உணவு டெலிவரி ஊவியர்கள் எந்தளவுக்கு மோசமான ஒரு பணி சூழலில் இருக்கிறார்கள்.. எவ்வளவு குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. டெலிவரி ஊழியர்களின் நிலையை விளக்கி ஒரு டெலிவரி பாய் கதறி அழுத வெளியிட்ட வீடியோ இணையத்தில் இப்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த காலத்தில் நாம் வீடுகளில் இருந்தபடியே உணவுகளை ஆர்டர் செய்கிறோம். உணவை ஆர்டர் போட்டால் கொஞ்ச நேரத்திலேயே சுடசுட உணவு வீட்டிற்கே வந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உணவுகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். ஆனால், நமக்கு உணவை டெலிவரி செய்வோர் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பது பெரும்பாலும் நமக்கு தெரியாது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

கதறி அழுத டெலிவரி பாய்
உணவு டெலிவரி செய்யும் நபர் வேலையின்போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. டெலிவரி தொழில் எந்தளவுக்கு கடினமாக இருக்கிறது.. இதில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்தளவுக்கு அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை காட்டுவதாக இந்த வீடியோ இருக்கிறது. சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாய் போல
அந்த வீடியோவில் மஞ்சள் நிற டெலிவரி யூனிஃபார்ம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்த அந்த ஊழியர், தனது அன்றாட வாழ்க்கையின் கடினமான யதார்த்தத்தை விவரித்து கதறி அழுதார். வேலைப்பளு காரணமாக தினமும் சோர்வடைவதாகவும், ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.
அந்த நபர் மேலும் தனது வீடியோவில், "நான் தினமும் 10 மணி நேரம் உணவு டெலிவரி செய்கிறேன். ஒரு நாய் போல் சோர்வாக உணர்கிறேன். ஒரு நொடி கூட ரிலாக்ஸாக இருக்க எனக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் நான் ரிலாக்ஸ் செய்தால், நான் அன்றைய தினம் பசியுடன் தூங்க போக வேண்டி இருக்கும். இந்தச் சூழலில் நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
படிப்பை விட்டது தப்பு
படிக்கும் காலத்தில் ஒழுங்காக படிக்காமல் பாதிலேயே படிப்பை நிறுத்தியதே இதற்கு காரணம் என சொல்லி அவர் வருந்துகிறார். அவர் மேலும், "எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், நான் கண்டிப்பாக ஒழுங்காக படிப்பேன். ஆசிரியர்கள் எச்சரித்தும் நான் கேட்காமல் பள்ளியை விட்டு வெளியேறியது தவறு" என்று கூறி கதறி அழுகிறார்.
வேதனை
தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பெற்றோரை கூட கவனித்துக் கொள்ளக் கூட முடியவில்லை என்று அவர் வேதனையுடன் கூறுகிறார். அவர் மேலும், "என்னால் என் பெற்றோருக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கையை கொடுக்க முடியவில்லை. என்னால் நான் விரும்பும் வாழ்க்கையையும் வாழ முடியவில்லை. இது என் மனதை உடைக்கிறது. ஆனால் நான் இதைப் பற்றி யாரிடம் பேசுவது?" என்று அவர் கதறினார்.
இந்த வீடியோ பலரையும் கலங்க செய்வதாக இருக்கிறது. அவர் பேசும் மொழி புரியவில்லை என்றாலும் அந்த வீடியோவில் அவரது வலி தெளிவாக தெரிகிறது. படிக்கும் வயதில் ஒழுங்காக படிக்காமல் பாதியிலேயே பள்ளி படிப்பை விட்டதே தான் செய்த தவறு என்பதை உணர்ந்து அவர் அழுகிறார். படிப்பு ஒருவருக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை இதைவிட உணர்த்திவிட முடியாது.
முதல்முறை இல்லை
அதேநேரம் சீனாவில் டெவிவரி ஊழியர்கள் மிக நீண்ட நேரம் வேலை செய்வது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு, சீனாவில் டெலிவரி ஊழியர் ஒருவர் 18 மணி நேரம் வேலை தொடர்ச்சியாக வேலை செய்த நிலையில், அவர் பைக்கில் தூங்கிய போது அப்படியே அவரது உயிர் பிரிந்தது. அவர் குடும்பத்திற்கு அவர் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டி வந்ததால் சில சமயங்களில் 3 மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறார். இதுவே அவரது உயிரையும் பறித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications