பாய்ந்து வந்த பனிச்சரிவு! அப்படியே உறைந்து போன சுற்றுலா பயணிகள்! திக்திக் நொடிகள்..பதைபதைப்பு வீடியோ
பிஷ்கெக் : கிர்கிஸ்தானின் தியான் ஷென் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
வானுயர்ந்த சிகரங்களில் அதிகளவிலான பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து உயரமான மலைப்பகுதிகளில் படர்ந்திருக்கும். இப்பனிக்கட்டிகள் சரிவது தான் பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது.
அவ்வாறு பனிக்கட்டிகள் சரியும் போது மிக வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன , இதன் காரணமாக வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கிறது.

பனிச்சரிவு விபத்து
இதுவரை பதிவான பல விபத்துகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பனிசரிவுகளில் உலர்ந்த பனி பனிச்சரிவு மிகவும் ஆபத்தானது ஆகும். இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் கூட சரியும். கூடவே கடும் குளிர் காற்றும் வீசும் என்பதால் இது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இதுவரை உலகளவில் நடந்த பனிச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தியான் ஷென் மலைப்பகுதி
இந்நிலையில் கிர்கிஸ்தானின் தியான் ஷென் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பனிசரிவு காட்சிகள்
கிர்கிஸ்தானுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஹாரி ஷிம்மின் தான், தான் படம் பிடித்த பனிசரிவு காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே உலக அளவில் அது வேகமாகப் பரவி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

பெண் காயம்
ஹாரி ஷிம்மின் மற்றும் மற்றும் அவரது நண்பர்கள் நடைபயணம் மேற்கொண்டிருந்த மலை உச்சியில் பனிப்பாறை திடீரென சரிந்து விழுந்து பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த சுற்றுலா குழுவில் ஒன்பது பிரிட்டிஷ் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில், பனிச்சரிவைக் கண்டதும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் ஓடினர். இருப்பினும் ஒரு பெண் பனிசரிவில் லேசான காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications