சீனாவுக்கு சோதனை மேல் சோதனை! நடுவானில் நொறுங்கி சிதறிய விண்வெளி கனவு! தீப்பிழம்பான டையாங்லாங் 3
பீஜிங்: விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசாக திகழ்ந்தாலும், அடுத்து ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவதில் சீனா தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் சீனா-ப்ரான்ஸ் இணைந்து ஏவிய ராக்கெட் விபத்துக்குள்ளான நிலையில், நேற்று ஏவிய டையாங்லாங் 3 ராக்கெட் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
உலகின் பல வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதாரப் போட்டியை போலவே விண்வெளி ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு தங்கள் ஆய்வு கலன்களை அனுப்பி நிலா மற்றும் பிற கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.

ஆனால் நீண்ட காலமாகவே சீனா விண்வெளி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனாவும் விண்வெளியில் மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவின் விண்வெளி முன்னோடி ஆய்வு நிறுவனமான தியான்பினங் டெக்னாலஜிஸ் அண்ட் கோ, டையாங்லாங் 3 என்ற ராக்கெட்டினை உருவாக்கி வருகிறது.
இந்த ராக்கெட்டு தான் சோதனை முயற்சியின் போது தோல்வியை சந்தித்து விழுந்து நொறுங்கியது. சீனாவில் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இருந்தாலும் தியான்பிங் டெக்னாலஜிஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் விண்வெளிக்கு விண்கலன்கள் மற்றும் மனிதர்களை அனுப்பும் வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
ஒரு முறை ராக்கெட் அனுப்பும்போது கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் மறு பயன்பாட்டு ராக்கெட் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் நேற்று சீனாவின் கோங்கி பகுதியில் டையாங்லாங் 3 ராக்கெட்டின் முதல் கட்ட சோதனை நடைபெற்றது. திட்டமிட்டபடி கவுண்ட்டவுன் முடிந்ததும் வெண் புகையை கட்டியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த டையாங்லாங் 3 ராக்கெட் சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்தது.
அதன் இன்ஜினில் தீப்பற்றியநிலையில் ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் தரையை நோக்கி வந்தது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் மலைப்பகுதியில் ராக்கெட்டின் சில பாகங்கள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் பல மீட்டர் தூரத்திற்கு தீப்பிழம்பு எழுந்த நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அது உடனடியாக அணைக்கப்பட்டது.
ஸ்கை டிராகன் 3 என்று அழைக்கப்படும் டையாங்லாங் 3 ராக்கெட் இரண்டு நிலை வடிவமைப்பைக் கொண்டது. பூஸ்டர் மற்றும் ட்ராக்கர் கொண்ட இந்த ராக்கெட் தான் தற்போது விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவும் பிரான்சும் இணைந்து அனுப்பிய ராக்கெட் விபத்துக்குள்ள நிலையில் தற்போது அடுத்த வாரத்திலேயே மீண்டும் ஒரு ராக்கெட் விபத்துக்குள்ளாகி இருப்பது சீன விண்வெளி ஆய்வுத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மண்ணெண்ணெய் ஆக்சிஜன் ராக்கெட்டான டையாங்லாங் -2ஐ தியான்பிங் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications