ரூ. 18 லட்சத்தில்... டிவி, நீச்சல் குளம், ட்ரெட்மில் புடை சூழ உங்கள் ‘பப்பி’யின் கனவு இல்லம் தயார்!
லண்டன்: டிவி. நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நாய்களுக்கான கனவு இல்லத்தை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது. விலை ஜஸ்ட் ரூ. 18,65,263 தான்.
வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளில் நாய்கள் முக்கியமானது. மற்ற உயிரினங்களை விட வீட்டிற்கு பாதுகாப்பு தரும் நாய்களை ‘மக்களின் நண்பன்' என்றே அழைக்கின்றனர். இதனாலேயே குடும்ப உறுப்பினராகவே பெரும்பாலான வீடுகளில் நாய்கள் மதிக்கப்படுகின்றன.
எனவே, அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபார நிறுவனங்கள், நாய்களுக்கென்றே பிரத்யேக உணவு, உடை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றன. தற்போது இந்த வரிசையில் நாய்களுக்கான பிரத்யேக கனவு இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனவு இல்லம் இது தான்...
சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கனவு இல்லத்தில், வீட்டுக்குள் பட்டனை அழுத்தினால் பாத்திரத்தில் உணவு வந்து விழுகிறது. வீட்டின் சுவரில் டிவி அமைக்கப்பட்டிருக்கிறது.

நீச்சல் குளமும் உண்டு...
வீட்டுக்கு வெளியே ட்ரெட்மில் அமைக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சி செய்துவிட்டு, குளிப்பதற்காகச் சிறிய நீச்சல் குளமும் இருக்கிறது.

ரெஸ்ட்...
வேலைகளை முடித்துவிட்டு மென்மையான தலையணைகள் மீது படுத்து ஓய்வெடுக்கலாம். பொழுது போகவில்லை என்றால் அவை டேப் எடுத்து விளையாடலாம்.

ஜஸ்ட் ரூ. 18 லட்சம் தான்...
இவ்வாறு பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப் பட்டுள்ள இந்த நாய் வீட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18,65,263 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த வீடு இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாயாப் பொறந்தாலும், இந்த மாதிரி வீட்ல வாழணும்பா....!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications