மாடு தர்றேன், ஆடு தர்றேன்.. மகளைத் தாரீங்களா... ஒபாமாவிடம் ‘டீல்’ பேசும் கென்ய வக்கீல்!

Subscribe to Oneindia Tamil

நைரோபி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகளைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்ய 50 மாடுகள், 70 ஆடுகள் தர தயாராக இருப்பதாகவும் கென்ய வழக்கறிஞர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ( 16). இவரைத் தான் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனே.

இது தொடர்பாக தி நைரோபி பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார் கிப்ரோனே. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பார்த்த முதல்நாளே...

பார்த்த முதல்நாளே...

ஒபாவின் மகளை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனது வாழ்க்கையில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் நான் காதலித்ததில்லை. அதனால் மலியாவுக்கு உண்மையாக இருப்பேன் என்பது நிச்சயம்.

எழுதப் போகிறேன் ஒரு கடிதம்...

எழுதப் போகிறேன் ஒரு கடிதம்...

இது தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். அத்துடன், ஒபாமா கென்யா வரும்போது, மலியாவையும் உடன் அழைத்து வர வலியுறுத்த உள்ளேன். அவர் இதற்கு ஒப்புக் கொண்டால், நான் எனது காதலை மலியாவிடம் தெரிவிப்பேன்.

50 மாடுகள் தருகிறேன்...

50 மாடுகள் தருகிறேன்...

அத்துடன் அதிபர் ஒபாமாவுக்கு 50 மாடுகள், மற்றும் 70 ஆடுகளை தருகிறேன். எனது கடிதத்தை தூதரகம் ஒபாமாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

சோளக்கஞ்சி வைக்க...

சோளக்கஞ்சி வைக்க...

மலியாவிடம் தற்கால முறைப்படி ஷாம்பேயின் ஒயினுடன் விருப்பத்தை தெரிவிக்காமல் பாரம்பரிய முறைப்படி எனது விருப்பத்தை வெளிப்படுத்துவேன். திருமணத்துக்கு பின்னர் மலியாவுக்கு பால் கறக்கவும், சோளக் கஞ்சி செய்யும் கெலேஞ்சின் பெண்களின் பாரம்பரியம் குறித்தும் கற்றுக் கொடுப்பேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

எளிமையான வாழ்க்கை...

எளிமையான வாழ்க்கை...

மேலும், ஒபாமாவின் பணம் மற்றும் செல்வாக்கிற்காக அவரது மகளைக் காதலிக்கவில்லை என்றும், மலியாவுடன் தான் எளிமையான வாழ்க்கை வாழ ஆசைப் படுவதாகவும் அப்பேட்டியில் கிப்ரோனே குறிப்பிட்டுள்ளார்.

கண்டநாள் முதலாய்...

கண்டநாள் முதலாய்...

கடந்த 2008ம் ஆண்டு தான் இவர் முதன்முதலாக மலியாவைக் கண்டாராம். கண்ட நாள் முதலாகவே காதல் வளர்த்து வருகிறாராம். ஆனால், மலியாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் கிப்ரோனேயின் வயது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

கென்யா தான் பூர்வீகம்...

கென்யா தான் பூர்வீகம்...

ஒபாமாவின் பூர்வீகம் கென்யா தான். அவரது தந்தை கென்ய நாட்டைச் சேர்ந்தவர். தற்போதும் 90 வயதாகும் ஒபாமாவின் தந்தை வழிப் பாட்டி கென்யாவில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+