வரலாற்றில் முதல் முறை.. தாவரங்கள் சுவாசிக்கும் அசத்தல் வீடியோ பாருங்க.. விஞ்ஞானிகள் தந்த சர்ப்ரைஸ்
வாஷிங்டன்: செடி, கொடிகள் உட்பட அனைத்து தாவரங்களும் உயிருள்ளவை என்பது நமக்கு தெரியும்.. அவை சுவாசிக்கின்றன என்றுகூட நமக்கு தெரியும்.. ஆனால் அவை சுவாசிப்பதை நேரில் யாரும் இதுவரை பார்த்ததே இல்லை... முதல்முறையாக அவற்றை நேரில் பார்க்கும் ஆச்சரியமான விஷயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.. எப்படி தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் இப்போது இப்படியொரு ஆச்சரியத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளனர்..

இலைகளில் உள்ள நுண் துளைகள் மூலம் தாவரங்கள் எப்படி மூச்சு விடுகின்றன என்பதை முதன்முறையாக வீடியோவில் பதிவு செய்துள்ளனர்... அதுவும் லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்..
தாவரங்கள் சுவாசிக்கும் வீடியோ
பொதுவாக, தாவரங்களின் இலைகளில் ஆயிரக்கணக்கான சிறிய துளைகள் இருக்கும்.. இதை ஸ்டோமாட்டா என்பார்கள்.. இதன் வழியாகத்தான் தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி கொண்டு, தேவையான ஆக்சிஜனையும், நீரையும் வெளியே விடுகின்றன.. இந்த ஆக்சிஜனைதான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள்..
ஆனால், ஆக்சிஜனை தாவரங்கள் வெளியே விடும்போது, அந்த காட்சியைதான், விஞ்ஞானிகள் தற்போது வீடியோவாக ரெக்கார்டு செய்துள்ளனர்.. இதற்காக இரண்டு முக்கிய கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்..
மைக்ரோஸ்கோப் கருவி
ஒரு கருவி மைக்ரோஸ்கோப்.. இது மிக துல்லியமானவற்றையும் நமக்கு காட்டிவிடும்.. 2வது இலைத் துளைகள் எப்படி திறந்து மூடப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் மெஷின் லேர்னிங் சாப்ட்வேர்..
இந்த சாப்ட்வேர் மூலம், தாவரங்கள் வெயிலில் அதிகமானபோது அல்லது ஈரப்பதம் குறைந்தபோது நீரிழப்பை குறைக்க தங்களின் துளைகளை மூடிக்கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த 2 கருவிகளை வைத்துதான் தாவரங்கள் சுவாசிப்பதை லைவ் வீடியோவாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துள்ளனர்..
முதன்முறையாக வந்த வீடியோ
இது வெறும் தாவரங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இந்த கண்டுபிடிப்பால் விவசாயத்துறைக்கு பெரிய உதவி கிடைக்கும்.. முக்கியமாக நீர் குறைவான இடங்களில் பயிர்கள் எப்படி தப்பி பிழைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.. மேலும் புதிய, வறட்சியை தாங்கும் பயிர்களை உருவாக்க முடியும்..
அதுமட்டுமல்லாமல் உலகம் சூடாவதற்கும் தாவரங்களின் சுவாசம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, எதிர்கால உணவு பாதுகாப்பை உறுதி செய்யலாம். இந்த ஒரு வீடியோவை வைத்தே இத்தனை விஷயங்களையும் விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்..
வரலாற்றில் முதல் முறை
அமெரிக்க விஞ்ஞானிகள் இதை முதன்முறையாக நேரலையில் பதிவு செய்துள்ள நிலையில், இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளன..
இப்போது அடுத்தக்கட்டமாக விஞ்ஞானிகள் பல்வேறு மரங்கள், செடிகள் எப்படி சுவாசிக்கின்றன என்ற சுவாச முறைகளை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்..
முதல் முறையாக, மனிதர்கள் போல தாவரங்களும் உலகத்துடன் தொடர்பில் இருப்பதை, சுவாசம் மூலம் விஞ்ஞானிகள் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி காண்போரை திகைப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது...!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications