சீனாவுக்கே இப்படியொரு நிலையா.. பயங்கரமாக சரிந்த ஏற்றுமதி! பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை! என்ன காரணம்
பெய்ஜிங்: கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவின் இறக்குமதி குறைந்துள்ளது. சீனா எந்தளவுக்கு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
கடந்த சில தலைமுறைகளாகவே படுவேகமாக வளர்ந்து வந்த நாடுகளில் ஒன்று சீனா.. அமெரிக்காவுக்குப் பிறகு இப்போது இரண்டாவது பெரிய பொருளாதாரமாகச் சீனா இருக்கிறது. ஆனால், இப்போது சில காலமாகச் சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

ஏற்றுமதி குறைவு: இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவின் மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி 2022இல் $3.59 டிரில்லியனில் இருந்த நிலையில், அது கடந்த 2023இல் 4.6 சதவீதம் சரிந்து 3.38 டிரில்லியன் டாலராக இருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதைச் சீனாவின் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளில் தெரிகிறது.
கடந்தாண்டு ஏற்றுமதி மட்டுமின்றி இறக்குமதியும் கூட சீனாவில் கடந்தாண்டு குறைந்துள்ளது. சீனாவின் இறக்குமதி கடந்த ஒரே ஆண்டில் 2.5 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த 2022 உடன் ஒப்பிடும் போது 5.5% குறைவாகும். 2022இல் 2.7 டிரில்லியன் டாலராக இருந்த இறக்குமதி கடந்தாண்டு 2.2 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது.
சீன அதிபர்: மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சவால்களைச் சந்தித்து வருவதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு தினத்தன்று ஒப்புக்கொண்ட நிலையில், இப்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் நிலையில், அங்கே வேலையின்மையும் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த ஜூன் 2023இல் சீனாவில் வேலையின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 21.3%ஐ எட்டியது. நிர்வாக செலவு, நிதிச் சுமை, ரியல் எஸ்டேட் சந்தை நெருக்கடி, ஏற்றுமதி குறைவு என்று சீனா இப்போது எல்லா பக்கமும் அடி வாங்க ஆரம்பித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறையும்: 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த 30 ஆண்டுகளில் மிகக் குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளும் பல முக்கிய நிறுவனங்களும் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து வருகிறது.
கடந்த 2023இல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகள் மற்றும் ஜப்பான் என அனைத்து நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதிகள் 2022 உடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 13.1% குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக உலக நாடுகள் தங்கள் செலவுகளைக் குறைத்து வருகிறது. இதனால் நுகர்வும் குறைந்து வரும் நிலையில், இதுவே சீனாவின் ஏற்றுமதி குறையக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
எச்சரிக்கும் வல்லுநர்கள்: சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் சீனா இதுபோன்ற பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளக் கூடும் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தன. இருப்பினும், அதைச் சீனா மறுத்தே வந்த நிலையில், இப்போது அது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குச் சீனாவின் பொருளாதாரம் இதே நிலையில் தான் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். சர்வாதிகார அரசை நடத்தி வரும் ஜி ஜின்பிங் அரசுக்கு இது சிக்கலைத் தரலாம். இதனால் மக்கள் கோபமும் அதிகரிக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications