செவ்வாய் கிரகத்தில் காய்கறி விளைய வைக்கப்போகிறதாம் நாசா.. நம்மூர் மார்க்கெட்டிலும் கிடைக்கலாம்!
நியூயார்க்: சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி மார்ஷியன்' செவ்வாய்கிரக வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது. செவ்வாய் கிரகத்தில் தனியாக சிக்கிக்கொள்ளும் விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மேட் டேமோன், அங்கேயே காய்கறி பயிரிட்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொள்வதை அப்படம் சுவாரசியப்படுத்தி தந்துள்ளது.
ஆனால் சினிமா ரிலீஸ் ஆகும் முன்பே, விண்வெளியில் விவசாயம் நடந்துவிட்டது என்பதை நாசா உறுதி செய்து ஆச்சரிய ரேகைகளை மக்கள் முகங்களில் பரவ விட்டுள்ளது.

நாசா சார்பில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் (ISS) அமைக்கப்பட்டு, அங்கு விஞ்ஞானிகள் குழுமி ஆய்வு நடதத்தி வருகிறார்கள். அந்த விண்வெளி கூடத்தில், காய்கறி, விளைவிக்கப்பட்டுள்ளதாம்.
உட்டா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின், மண்ணியல், தாவரவியல் இயக்குநர் ப்ரூஸ் பக்பீ ஆலோசனைப்படி, கடினமான சூழ்நிலை கொண்ட விண்வெளியில் காய்கறி விளைவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், விண்வெளியில் காய்கறி சலாட் செய்ய தேவைப்படும் காய்கறிகளை மட்டும் பயிரிட்டு விஞ்ஞானிகளின் பசியாற்றுவது எங்கள் நோக்கமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

காய்கறி பயிரிடும் திட்டத்திற்கு, வெஜ்-01 என்று நாசா பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே வெற்றிகரமாக காய்கறி விளைவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை வேறு கிரகங்களில் செயல்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக செவ்வாயில் மரம் நடு விழா வெகு விரைவில் நடக்கலாம் என்கிறது நாசா வட்டாரம்.

காய்கறிகளை விளைவிப்பதால், விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு மனரீதியாக, தெம்பு கிடைப்பதாக தெரியவருகிறது. பூமியில் இருப்பதை போன்றே அவர்கள் உணர தொடங்கியுள்ளனராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications